ஆய்வும் தக்லீதும்
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ மொழிபெயர்ப்புகளே மார்க்கம் ஆதாரம் என நம்பிவிடுவது தான் பல குழப்பங்களுக்கு காரணமாக அமைகிறது. மொழிபெயர்ப்பு என்பது அந்த மொழிபெயர்ப்பாளரின் புரிதலின் வெளிப்பாடு மட்டுமே. ஒருவர் எந்த சிந்தனையில் உள்ளாரோ அந்த சிந்தனைக்கு ஏற்றவாரே ஒரு வசனம் அல்லது ஹதீஸின் மொழிபெயர்ப்பை செய்வார். எவ்வளவு கற்றுதேர்ந்த அறிஞரானாலும், அவருக்கும் இவ்வுலகில் “ஒரு பறவை கொத்தியெடுக்கும் நீரின் அளவிலிருந்து குறிப்பிட்ட பங்கு” அறிவு தான் வழங்கப்பட்டுள்ளது எனும்போது, ஒரு எழுத்துக்குள் ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வார்த்தைகளை யாராலும் பரிபூரணமாக மொழிபெயர்க்கவே முடியாது.. ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தங்களால் இயன்றளவு அந்தந்த காலத்திற்கு ஏற்றார்போல் சிறந்த சொல்லாடலை தருகிறார்கள் அவ்வளவே. அந்த கருத்துக்கள் அவரவர்களின் அறிவுக்கும், சிந்தணைக்கும் ஏற்றவாறு மாறுபடும். இதை நீங்கள் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஒன்றாக வைத்து ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். மேலும், அல்குர்ஆன் மூல மொழியில் காலத்திற்கும் மாற்ற முடியாத வேதமாகும். ஆனால் இது நபிகளார் காலம் முதல், கியாமத் நாள