Posts

Showing posts from May, 2017

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

           ந பி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்கிற பெண்மனியின் வீட்டிற்கு சென்றுவருவது வழக்கம், அப்பெண்மனி நபிகளாருக்கு பேன் பார்த்துவிடுவார்கள், அருகில் படுத்து உறங்குவார்கள் என்றெல்லாம் ஹதீஸ் என்கிற பெயரில் தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ புனையப்பட்ட செய்தி புஹாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் இடம்பெற்றுள்ளது. பார்க்க : புஹாரி - 2788, 2789, 2800, 2895, 2924, 7001,7002, முஸ்லிம் - 3873, அந்நிய பெண்கள் விடயத்தில் மிகுந்த எச்சரிக்கை பேணக் கற்றுத்தந்த நபிகளாரே, அந்நியப் பெண்ணின் வீட்டில் சென்று உறங்கினார்கள் எனக் கூறுவது அபத்தமான வாதம், மேலும் அந்நிய பெண்களை பார்த்தாலே பார்வைகளை தாழ்த்தும்படி திருமறை குர்ஆன் கட்டளையிடுகிறது, எனவே இந்த உம்மு ஹராம் குறித்த செய்திகள் குர்ஆனுக்கும் ஸஹீஹான பிற ஹதீஸ்களுக்கும், நபிகளாரின் இயல்பான நல்லொழுக்க மாண்புகளுக்கும் தெளிவாக முரண்படுகிறது, இது ஹதீஸாக இருக்கவே முடியாது என்கிற அடிப்படையில் இதை ஏற்கக் கூடாது என்கிறோம்... ஆனால் சிலர் இது போன்ற செய்திகளை உண்மைப்படுத்தி நபிகளாரின் இயல்பான நல்லொழுக்கத்தை இழிவுபடுத்த முயல்கிறார்கள். இதற்கு இவர்கள் கூறும் காரணம் இரண்டு