Posts

Showing posts from 2016

தலாக் சட்டங்கள்.. தொடர் 5

Image
க ணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வந்து நல்லிணத்திற்கான இஸ்லாம் கூறும் அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்பட்ட பின்னரும் பயனில்லை என்றால் தலாக் என்ற அமர்வுக்கு வர இஸ்லாம் அனுமத்திக்கின்றது என்று சென்ற தொடர்களில் பார்த்தோம்.. (முந்தைய தொடரை வாசிக்க) தலாக் செய்யப்படும் பெண் அந்த நேரத்தில் தூய்மையான நிலையில் இருக்க வேண்டும்..அதாவது பெண்ணுடைய மாதவிலக்கு காலத்தில் தலாக் சொல்லக்கூடாது... நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்) "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, பிறகு இரண்டாவது மாதவிடாய் ஏற்பட்டுப் பிறகு அதிலிருந்தும் தூய்மையடையட்டும்! பின்னர் அவர் (விரும்பினால்) தலாக் சொல்லிக்கொள்ளட்டும். அல்லது தம்மிடம் (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்! " என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) முஸ்லிம் 2923 மாதவிலக்கு ந

தலாக் சட்டங்கள்.. தொடர் 4

Image
க ணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் வரும்பொழுது கணவன் தலாக் என்ற முடிவை எடுப்பதற்கு முன் அவர்களை சேர்த்துவைக்கும் நோக்கில் பல கட்டங்களை கடந்துவர இஸ்லாம் வழிகாட்டுகிறது என்ற விபரங்களை சென்ற மூன்று தொடர்களில் விவரித்தோம்.. (முந்தைய தொடரை வாசிக்க) அவற்றில் முக்கியமாக, இரண்டு உறவினர்களை நடுவராக அமைத்து பேசுவது ஒரு முயற்சியாகும் என்பதையும் விவரித்து இருந்தோம்...இவ்வளவுக்கு பிறகும் தம்பதியினரிடம் சேர்வதற்கான எந்த சாதகங்களும் இல்லை என அந்த நடுவர்களும் முடிவெடுத்தால் தலாக் என்ற அனுமதியை கணவனுக்கு இஸ்லாம் வழங்குகிறது.. தலாக் என்ற அமர்வுக்கு வந்தபின் முதலில் கவனிக்க வேண்டியது இரண்டு சாட்சிகள் ஆகும்... உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! திருக்குர்ஆன் 65:2 பொதுவாக சாட்சிகளாக இருக்கக்கூடியவர்கள் அநீதியான ஒப்பந்தங்களுக்கு துணைப்போகக் கூடாது என இஸ்லாம் தடுத்துள்ளது.(பார்க்க :நூல் முஸ்லிம் 3330 ) எனவே தலாக்கிற்கு சாட்சியாக செல்லக்கூடியவர்கள் நியாயமான காரணங்களுக்காக தான் தலாக் சொல்லப்படுகிறதா என்பதை அறிந்துகொள

தலாக் சட்டங்கள்.. தொடர் 3

Image
க ணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வரும்பொழுது ஆண்கள் அவசரப்பட்டு தலாக் சொல்வதை மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை,.அதற்கு முன் அவர்கள் இணைவதற்குண்டான பல வழிகாட்டல்களை இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது என்பதைப் பற்றி சென்ற இரண்டு பதிவுகளில் பார்த்தோம்..  (2ஆம் தொடரை வாசிக்க) சம்பந்தப்பட்ட தம்பதியர் எவ்வளவுதான் தங்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளை வெளியே சொல்லாமல் மறைக்க நினைத்தாலும், அவர்களின் நடத்தையிலேயே குடும்பத்தார்கள் அறிந்துகொள்வார்கள். இருவரும் பிரியமாக தான் இருக்கிறார்களா இல்லையா என்பதை சில சூழ்நிலைகளே பெரியவர்களுக்கு காட்டித்தந்துவிடும்.. இதுபோன்ற சூழல்களில் குடும்ப பெரியோர்கள் தலையிட்டு விசாரிப்பது அவசியமாகும், அதற்கு சில வழிமுறைகளையும் இஸ்லாம் சொல்லித்தருகிறது.. அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான். அல்கு

தலாக் சட்டங்கள்.. தொடர் 2

Image
பெ ரும்பாலும் ஆண்கள் தலாக் என்ற பேச்சை எடுக்கக் காரணம், மனைவி தன்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறாள் என்ற உணர்ச்சி வேகத்தில்தான். கட்டுப்பட மறுக்கும் பெண்ணை அழகிய வழிமுறைகளால் தனது வழிக்கு கொண்டு வந்து, குடும்ப வாழ்க்கையைச் சிறப்பாகக் கொண்டு செல்ல முயற்சிப்பது தான் புருஷலட்சணம் ஆகுமே தவிர, எடுத்த எடுப்பில் கழற்றிவிட நினைப்பது ஆண்மைக்கு அழகல்ல; அது நியாயமானதும் அல்ல. எனவே தான் உணர்ச்சிவசப்பட்டு, பெண்களுக்கு அநீதி இழைத்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாம் பல வழிகாட்டல்களை ஆண்களுக்கு வழங்குகியுள்ளது.அதில் ஓர் அம்சம் தான் 'ஈலாஃ' என்ற மார்க்க வழிகாட்டல் குறித்து முதல் பதிவில் பார்த்தோம்.. ( முதல் தொடரை வாசிக்க ) பெரும்பாலும் ஈலாஃ இருப்பதன் காலகட்டத்தில், தம்பதியர் தங்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் இணைந்து வாழவே முன்வருவர். அப்படி முன்வராத பட்சத்தில் கணவன், கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைபிடிக்க இஸ்லாம் கட்டளையிடுகிறது. பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை (லேசாக) அடியுங்கள்

தலாக் சட்டங்கள்.. தொடர் 1

Image
க ணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்து அது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும்பொழுது விவாகரத்து என்ற முடிவுக்கு வருவது உலகில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களிடமும் கடைபிடிக்கப்படும் ஒரு பொதுவான நடைமுறையாகும். என்றாலும், முஸ்லிம்கள் செய்யும் விவாகரத்து மட்டும் இந்த நாட்டில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக பார்க்கப்படுகிறது. இதற்கு முழுமுதற் காரணம் முஸ்லிம்களுக்கு தலாக் பற்றிய சட்டங்களைச் சரியாக விளக்கிக் கூறாத, மார்க்கத்தை அறியாத மார்க்க அறிஞர்கள் தாம். முஸ்லிம்கள் தங்கள் விவாகரத்து விவகாரங்களை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லாமல் தங்கள் மார்க்க அடிப்படையிலேயே முடிவு செய்து கொள்கிறார்கள் எனும்போது இந்த மார்க்க அறிஞர்கள் அது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதால் தான் எடுத்த எடுப்பிலெல்லாம் தலாக் கூறி பெண்களுக்கு அநீதி இழைக்கும் நிலை இந்தச் சமுதாயத்தில் உருவாகி, தற்போது சங்பரிவார கும்பலின் தூண்டுதலால் உச்சநீதிமன்றம் இதில் தலையிடும் அளவுக்கு வந்துள்ளது. எஸ்.எம்.எஸ், ஈமெய்ல் ஆகியவற்றின் மூலம

ஏக இறைவனின் திருப்பெயரால்...

 وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏  நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 3:104