Posts

சலஃபியிஸ வரலாறு 1

சவூதி அரசு உலகெங்கும் தாஃவா செண்டர் ஏஜெண்டுகளை அமைத்து பண உதவி செய்து பிரச்சாரம் செய்துவரும் வஹ்ஹாபிசம் அதாவது இன்றைய சலஃபியிச கொள்கை, உண்மையில் குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் தூய இஸ்லாமாக இருந்தால், சவூதி அரேபியா இந்நேரம் இஸ்லாம் கூறும் சீர்த்திருத்தத்தை நோக்கி சென்றிருக்க வேண்டும்... ஆனால் நிலமையோ இன்று அப்படியில்லை. மென்மேலும் மேற்கத்திய யூத கலாச்சாரத்தை நோக்கியே நகர்கிறது. இனி அப்படித்தான் நகரும் என்றும், அரேபியா இன்னும் சில ஆண்டுகளில் புதிய ஐரோப்பாவாக மாறும் என சவூதி முடி இளவரசராக இருக்கும் யூத கைப்பாவை வெளிப்படையாக அறிவித்துள்ளது. நாடே இஸ்லாமிய சட்டத்தை கொண்டுள்ள நாடு என்று சொல்கிறார்கள்., நாட்டின் குடிமக்களெல்லாம் முஸ்லிம்ளாக இருக்கும் சூழல்.. இஸ்லாமிய சீர்திருத்தங்களை அந்த அரசே முழுமையாக செய்ய அங்கே தடையேதும் இருக்கிறதா ?  எந்த தடையும் இல்லாத சூழலில் விரும்பியே அவர்கள் இஸ்லாம் வெறுக்கும் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி நகர்கிறார்கள் என்றால் அதற்கு பின்னாலிருக்கும் மர்ம அரசியலை யூதர்களுடன் இவர்கள் காட்டும் நெருக்கத்தை மையமாக வைத்து யோசிக்க வேண்டியுள்ளது..  சவூதியின் யூத பாசம் வெகு காலமான

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

           ந பி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்கிற பெண்மனியின் வீட்டிற்கு சென்றுவருவது வழக்கம், அப்பெண்மனி நபிகளாருக்கு பேன் பார்த்துவிடுவார்கள், அருகில் படுத்து உறங்குவார்கள் என்றெல்லாம் ஹதீஸ் என்கிற பெயரில் தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ புனையப்பட்ட செய்தி புஹாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் இடம்பெற்றுள்ளது. பார்க்க : புஹாரி - 2788, 2789, 2800, 2895, 2924, 7001,7002, முஸ்லிம் - 3873, அந்நிய பெண்கள் விடயத்தில் மிகுந்த எச்சரிக்கை பேணக் கற்றுத்தந்த நபிகளாரே, அந்நியப் பெண்ணின் வீட்டில் சென்று உறங்கினார்கள் எனக் கூறுவது அபத்தமான வாதம், மேலும் அந்நிய பெண்களை பார்த்தாலே பார்வைகளை தாழ்த்தும்படி திருமறை குர்ஆன் கட்டளையிடுகிறது, எனவே இந்த உம்மு ஹராம் குறித்த செய்திகள் குர்ஆனுக்கும் ஸஹீஹான பிற ஹதீஸ்களுக்கும், நபிகளாரின் இயல்பான நல்லொழுக்க மாண்புகளுக்கும் தெளிவாக முரண்படுகிறது, இது ஹதீஸாக இருக்கவே முடியாது என்கிற அடிப்படையில் இதை ஏற்கக் கூடாது என்கிறோம்... ஆனால் சிலர் இது போன்ற செய்திகளை உண்மைப்படுத்தி நபிகளாரின் இயல்பான நல்லொழுக்கத்தை இழிவுபடுத்த முயல்கிறார்கள். இதற்கு இவர்கள் கூறும் காரணம் இரண்டு

சூனியத்தால் தாக்கம் உண்டா ?

 சூனியத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.சூனியக் காரர்கள் சில தந்திர வித்தைகளை காட்டி தனக்கு மந்திர வித்தைகள் தெரியும் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர், புரட்டாசி இன்றி எங்கோ இருக்கும் ஒருவர் இன்னொருவனுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கைக்கே மாற்றமானது என்பது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் எடுத்தியம்பி வருகிறோம்.. போதிலும் சூனியத்தை நம்பக்கூடியவர்கள் அதற்கு ஒரு புரட்டி வாதங்களை கற்பித்து மக்களை குழப்பி வருகின்றனர்... أحمد – (ج 45 / ص 477) 26212 – حدثنا أبو جعفر السويدي قال حدثنا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمعت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولا مكذب بقدر நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி),                   நூல் : அஹ்மது (26212) சூனியம் இல்லை என்பதற்கு இந்த நபிமொழ

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!

          ந பித்துவ வரலாற்றில் பெரும் அற்புதமாகவும், அத்தாட்சிகளையும் உள்ளடக்கிய அந்த நிகழ்வு நபியவர்களின் மக்கா வாழ்வின் போது நடைபெற்றது. மிஃராஜ் தொடர்பாக ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடம் பரப்புரை செய்யப்படுகிறது. அவற்றை கலைந்து மிஃராஜின்போது நிகழ்ந்தவைகளை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இங்கே அறியத் தருகிறோம்.. இந்நிகழ்வு ரஜப் 27ல் நடைபெற்றதாக ஒரு தவறான நம்பிக்கை மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது.இதற்கு உறுதியான எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மேலும் மிஃராஜ்  நோன்பு என்ற பெயரில் நோன்பு நோற்பதும் நபிகளார் காட்டித் தராத பித்அத்தான (புதுமை) அனாச்சாரம் ஆகும். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். அல்குர்ஆன் 17:1 ஜிப்ரீல் வருகை - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கினார்கள். என்னுடைய நெஞ்சைப் பி

வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள். தொடர் - 4

இறைதூதர் அல்லாதோரின் வழிமுறை மார்க்க ஆதாரம் ஆகுமா ? தக்லீது என்கிற வழிகெட்ட கொள்கையால் இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளாம்.இந்த மார்க்க சட்டதிட்டங்களை நமக்கு போதித்த அல்லாஹ்வின் வசனங்களுக்கு, அதனை விளக்கிக் கூற வந்த நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவையே சரியான விளக்கங்களை நமக்கு கொடுக்க முடியும்.மார்க்க சட்டங்களில் கருத்து வேறுபாடுகள், சந்தேகங்கள் எழும்போது நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை முறையாக ஆய்வுசெய்தாலே போதுமான தெளிவு கிடைக்கும்.. அதில்தான் நேர்வழியும் உள்ளது.. அதைவிடுத்து, மார்க்க சட்டங்களை விளங்குவதற்கு எங்களுக்கு நபிகளாரின் வாழ்வும், வழிமுறையும் போதாது, நபிகளாருக்கு பின் வந்த ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉ தாபிஈன்கள், இமாம்கள், நமது முன்னோர்கள் என இத்துனை சமுதாயத்தவரின் விளக்கங்களும் தேவை எனக் கூறுவோர் இந்த மார்க்கம் நபிகளார் காலத்தோடு முழுமையாக்கப் பட்டுவிட்டது என்கிற அடிப்படையை அறியாதோராகவே இருக்க வேண்டும்.. அல்லது இந்த மார்க்கத்தை அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்கு புரியும்படி விளக்கிக் கூறவில்லை என்கிற வழிகெட்ட கொள்கையுடையோராக இருக்க வேண்டும

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

கபுர் ஜியாரத் என்ற நபிவழி மார்க்கத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த நபிவழியை தர்காவில் செய்யும் அமல் என்று பலர் கருதி வருகின்றனர்.இது முற்றிலும் தவறு..கபுர் ஸியாரத்துக்கும் தர்காவுக்கும் சம்பந்தமேயில்லை..ஏன் இஸ்லாத்திற்கும் தர்காவுக்குமே சம்பந்தமே இல்லை என சொல்லலாம்.. (அலீ (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது படைத்தளபதியாக இருந்த அபுல்ஹய்யாஜ் அல் அஸதி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம்.. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) "உயர்ந்துள்ள எந்தக் கப்றையும்" தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதி (ரஹ்)                  நூல்: முஸ்லிம் 1764 கபுர்கள் காரையால் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்த

வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள். தொடர் - 3

ஸஹாபாக்கள் ஹதீஸ்களை அனுகிய முறையும், இன்று ஸலஃபுகள் என சொல்லிக் கொள்வோரின் நாடகமும்.. இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து “சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்து விட்டு, “அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக! இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக “அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள்” என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு 57:22 என்ற வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்) நூல்: அஹ்மத் (24894 ) பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் சகுனம் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபு ஹுரைரா (ரலி) அறிவித்து வருகிறார் என்று கூறி, அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் விளக்கம் கேட்கிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று மறுத்துபின்வரும் த