இஸ்லாத்தில் பட்டப்பெயர்கள்
தமது கொள்கைக்கு மாற்றுக் கருத்தில் உள்ளவர்களை பட்டப்பெயர் வைத்து இழிவுபடுத்துவது முஸ்லிம்கள் சிலரிடம் உள்ள தீய பழக்கமாகும். . இஸ்லாம் ஒருபோதும் தீய பட்டப்பெயர்கள் வைப்பதை ஆதரிக்கவில்லை. அதற்கு எதிராகவே பேசுகிறது. . يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌۭ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًۭا مِّنْهُمْ وَلَا نِسَآءٌۭ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًۭا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَـٰبِ ۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَـٰنِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ⭘ இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம், மற்றொரு சமுதாயத்தை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள், இவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும், மற்றப் பெண்களை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களைவிடச் சிறந்தோராக இருக்கலாம். உங்களுக்குள் (ஒருவரையொருவர்) குறை கூறிக் கொள்ளாதீர்கள். (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள். இறைநம்பிக்கைக்குப்பின் தீய பெயர்களைச் சூட்டுவது மிகக் கெட்டது. யார் பாவ மன்னிப்புத் தேடவில்லையோ அவர்களே...