இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் மற்றும் முஷ்ரிக்..
அளவிலா அருளாலனும் நிகரிலா அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள் மேலோங்கிய காலம் முதலே தங்களுக்கு மாற்றுக் கருத்தில் உள்ள சக முஸ்லிம் சகோதரனை நோக்கி முஷ்ரிக் காஃபிர் என முத்திரைக் குத்துவது சர்வ சாதாரண ஒன்றாக மாறியுள்ளது. இது பற்றிய தெளிவின்மையால் ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறிழைக்கும் நிலை ஏற்ப்படுகிறது. உதாரணமாக ஒருவரை முஷ்ரிக் என முடிவெடுத்து விட்டால் அவருடன் திருமண உறவு வைப்பது, அவரின் ஜனாஸாவில் பங்கெடுப்பது, அவருக்காக தவ்பா செய்வது என அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஹராமாகி விடுகிறது. இதையெல்லாம் சிந்திக்காமல் முஸ்லிம்களை நோக்கி அவசரகதியில் கொடுக்கப்படும் முர்தத் ஃபத்வாக்களால் அவசியமற்ற இடங்களிலெல்லாம் முஸ்லிம்களிடையே பிளவை உண்டாக்கி பாவம் சம்பாதிக்க வேண்டிய நிலை உண்டாகும். எனவே இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் யார் முஷ்ரிக் யார் என்பது பற்றிய தெளிவு முஸ்லிம்களுக்கு இருப்பது அவசியமாகும். ஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை மட்டுமே அவருடைய வெளிப்படையை வைத்து நாம் தீர்மாணிக்க முடியும். காரணம் இஸ்லாம் என்பது செயல் சம்பந்தப்பட்டது....