மனித ஷைத்தான்கள் - 2
கடந்த பதிவில் ஷைத்தானின் வஅஸ்வாஸின் ஒரு வகையை பார்த்தோம். அதை வாசிக்காதவர்கள் வாசிக்கவும். அதன் லிங்க் .. https://umarkhatthab.blogspot.com/2025/04/1.html ========================== மனதை குழப்பும் ஷைத்தானின் வஸ்வாஸிலேயே மிக கவனம் எடுக்க வேண்டியது, உலக இன்பம் பக்கம் தூண்டும் ஷைத்தான்கள் பற்றிய அல்லாஹ்வின் எச்சரிக்கை.. உலக ஆசை , நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை விட்டும் அதாவது மறுமை சிந்தணையை விட்டும் நம்மை திசைதிருப்பும். தற்காலிக உலக இன்பங்களின் மீது ஈர்ப்பை ஏற்ப்படுத்தி, அல்லாஹ்வை மறக்கச் செய்யும். அல்லாஹ்வை மறந்து வாழ்பவன் ஷைத்தானின் பாதையில் செல்ல ஆரம்பித்து விடுவான்.அவனது தவறுகள் அவனுக்கு நியாயமாகப் படும். அமல்கள் பாரமாகும். தொழுகை இன்னபிற அமல்கள் செய்வதை விட்டும் தூரமாகி, அவனது மனது அதற்கும் ஏதோ ஒரு ஆறுதலைக் கூறி ஏமாற்றி அதன் வழியிலேயே செலுத்தும்.. அதனால் தான் பல இடங்களில் அல்லாஹ் ஏமாற்றக்கூடிய உலக வாழ்க்கை என்று கூறுகிறான். يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ⭘ ...