இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்
குடும்பத்துடன் சொர்க்கம் செல்வோரும், நரகம் செல்வோரும்.. وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ⭘ فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا யாருடைய ஏடு அவனது முதுகுக்குப் பின்புறமாக வழங்கப்படுகிறதோ, அவன் அழிவை வேண்டுவான். وَيَصْلَىٰ سَعِيرًا அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான். إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا அவன், தனது குடும்பத்தாருடன் (உலகில்) மகிழ்ச்சியாக இருந்தான். إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ (இறைவனிடம்) அவன் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டான். بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا அவ்வாறல்ல! அவனுடைய இறைவன், அவனைப் பார்ப்பவனாக இருந்தான். அல்குர்ஆன் - 84 : 10 - 15 📌 சிலரின் ஏடுகள் முதுகுக்கு பின்னாலிருந்து கொடுக்கப்பட்டு நரகில் எறியப்படுவதற்கு காரணம், அவர்கள் பூமியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது குற்றமா என்றால் இல்லை. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே குடும்பத்தை பயன்படுத்துவது குற்றம். அந்த மகிழ்ச...