Posts

Showing posts from August, 2025

இஸ்லாம் விரோத மெட்டீரியலிஸ சிந்தணை ஓர் பார்வை

Image
இறைவனால் சோதனைக்காக வழங்கப்பட்ட அருட்கொடைகள் பலவிதம். சிலருக்கு பதவி அதிகாரங்களையும், சிலருக்கு செல்வ செழிப்பையும், சிலருக்கு மக்கள் செல்வாக்கையும், சிலருக்கு அறிவாற்றலையும் இறைவன் பூமியில் சோதனையாக வழங்கியுள்ளான். இந்த அருட்கொடைகள் யாவும் அவர்களின் சிறப்பு தகுதிகளோ, சிறப்பு அந்தஸ்தோ அல்ல, குறிப்பிட்ட கால சோதனைக்காக வழங்கப்பட்டவை. இவற்றை எந்தெந்த வழியில் பயன்படுத்தினார்கள் என்பது பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என இஸ்லாம் கூறுகிறது. ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ  பின்னர், அந்நாளில் நீங்கள் இந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அல் குர்ஆன் -   102 : 8   மேலும் பூமியில் மனிதர்களுக்கு இறைவன் இந்த அருட்கொடைகளை வழங்கியிருப்பதே, அவர்களை சுற்றியுள்ள பலவீனர்களின் பொருட்டால் தான் என்று இஸ்லாம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) காரணத்தால்தான் உங்களுக்கு (இறைவனின்) உதவியும் ரிஸ்கும் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள். - புகாரி 2896 . எனவே அந்த அருட்கொடைகளை வைத்து யாரும் பெருமையடிப்பதும் , மனிதர்களிடையே உ...