மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!
ந பித்துவ வரலாற்றில் பெரும் அற்புதமாகவும், அத்தாட்சிகளையும் உள்ளடக்கிய அந்த நிகழ்வு நபியவர்களின் மக்கா வாழ்வின் போது நடைபெற்றது. மிஃராஜ் தொடர்பாக ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடம் பரப்புரை செய்யப்படுகிறது. அவற்றை கலைந்து மிஃராஜின்போது நிகழ்ந்தவைகளை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இங்கே அறியத் தருகிறோம்.. இந்நிகழ்வு ரஜப் 27ல் நடைபெற்றதாக ஒரு தவறான நம்பிக்கை மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது.இதற்கு உறுதியான எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மேலும் மிஃராஜ் நோன்பு என்ற பெயரில் நோன்பு நோற்பதும் நபிகளார் காட்டித் தராத பித்அத்தான (புதுமை) அனாச்சாரம் ஆகும். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். அல்குர்ஆன் 17:1 ஜிப்ரீல் வருகை - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கினார்க...