Posts

Showing posts from 2025

ஆடம்பரமும் அதன் அளவுகோலும் ஓர் ஆய்வு

Image
                    ஆ டம்பரம், வீண் விரயம் குறித்து மக்களிடம் அதிகம் எச்சரிக்கை செய்கிறோம். விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான், அவர்கள் ஷைத்தானின் உடன்பிறப்புகள் என்கிற அல்குர்ஆன் வசனங்களை எடுத்து காட்டுகிறோம். ஆனால் சிக்கல் எங்கே வருகிறது என்றால், “எது ஆடம்பரம்? “ என்பதை அறிவதில் தான். இந்த விடயத்தில் மிகுந்த தெளிவுடன் நாம் இருக்க வேண்டும். காரணம் " ஒவ்வொரு சமுதாயத்துக்கும் சோதனை உண்டு. எனது சமுதாயத்தின் சோதனை செல்வம் ஆகும்". என்பது நபிகளாரின் எச்சரிக்கையாகும். திர்மிதி 2336. அந்த சோதனை செல்வத்தை சம்பாதிக்கும் வழியிலும் வரும், செலவழிக்கும் வழியிலும் வரும். இதை உணராமல் செல்வத்தை சம்பாதிப்பதில் ஹராம் ஹலால் பார்த்து பேணுதலுடன் இருப்பவர்கள் கூட, அதை செலவழிக்கும் விடயத்தில் அவர்களையே அறியாமல் ஆடம்பரத்திலும் வீண் விரயத்திலும் வீழ்ந்து விடுகின்றனர். இது குறித்து நபிகளார் எச்சரித்துள்ளார்கள். ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) எனக்குப்பின் 'இறைவன் உங்களுக்காக வெளிக் கொண...