உண்மையும் போலியும்
உண்மையும் போலியும் மனிதர்கள் இரண்டு வழிகளில் சமுதாயத்தில் தங்களுக்கான நன்மதிப்பை பெறுகிறார்கள்.. 1. ஒருவரின் செல்வம், அதிகாரம் அதன் மூலம் அவர் கட்டமைத்துள்ள செல்வாக்கு, ஆதிக்கமான போக்கு இவற்றின் மூலம் கிடைக்கும் போலியான மறியாதை.. 2. எவ்வித செல்வமோ, செல்வாக்கோ இன்றி சாதாரண மனிதராக வாழ்ந்தும், ஒருவர் பிற மக்களிடம் வெளிப்படுத்தும் நற்குணம், நன்னடத்தை, எளிமை, நேர்மை ஆகியவற்றால் கிடைக்கும் உண்மையான மறியாதை.. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், முதல் வகை மனிதர்கள் சிலரை சமுதாயத்தில் காண்போம். அவர்களிடம் நாம் காணும் ஆணவம், தற்பெருமை, மோசடி, ஏமாற்று போன்ற தீய குணங்களுக்கு, அவர்களிடம் செல்வமும் செல்வாக்கும் மட்டும் இல்லையென்றால் மக்களிடம் எந்த நன்மதிப்பையும் பெற்றிருக்க மாட்டார்கள் எனும் அளவுக்கு தீய குணங்களையும், குறுகிய மனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். . ஆனாலும் அவர்களுக்கு சமுதாயத்தில் மறியாதை செய்யப்பட காரணம் அவர்கள் மீதுகொண்ட நல் அபிப்ராயத்தால் அல்ல. மாறாக, துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதுபோல, இவர்களிடம் ஏன் வம்பு, இவர்களின் நாவிலும், தீங்கிலும் நாமும் சிக்க வே...