உண்மையும் போலியும்
உண்மையும் போலியும்
மனிதர்கள் இரண்டு வழிகளில் சமுதாயத்தில் தங்களுக்கான நன்மதிப்பை பெறுகிறார்கள்..
1. ஒருவரின் செல்வம், அதிகாரம் அதன் மூலம் அவர் கட்டமைத்துள்ள செல்வாக்கு, ஆதிக்கமான போக்கு இவற்றின் மூலம் கிடைக்கும் போலியான மறியாதை..
2. எவ்வித செல்வமோ, செல்வாக்கோ இன்றி சாதாரண மனிதராக வாழ்ந்தும், ஒருவர் பிற மக்களிடம் வெளிப்படுத்தும் நற்குணம், நன்னடத்தை, எளிமை, நேர்மை ஆகியவற்றால் கிடைக்கும் உண்மையான மறியாதை..
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,
முதல் வகை மனிதர்கள் சிலரை சமுதாயத்தில் காண்போம். அவர்களிடம் நாம் காணும் ஆணவம், தற்பெருமை, மோசடி, ஏமாற்று போன்ற தீய குணங்களுக்கு, அவர்களிடம் செல்வமும் செல்வாக்கும் மட்டும் இல்லையென்றால் மக்களிடம் எந்த நன்மதிப்பையும் பெற்றிருக்க மாட்டார்கள் எனும் அளவுக்கு தீய குணங்களையும், குறுகிய மனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
.
ஆனாலும் அவர்களுக்கு சமுதாயத்தில் மறியாதை செய்யப்பட காரணம் அவர்கள் மீதுகொண்ட நல் அபிப்ராயத்தால் அல்ல.
மாறாக, துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதுபோல, இவர்களிடம் ஏன் வம்பு, இவர்களின் நாவிலும், தீங்கிலும் நாமும் சிக்க வேண்டாம் என ஒதுங்கி செல்லும் மனிதர்களால் தான் சமுதாயத்தில் இவர்களுக்கு நன்மதிப்பு மிஞ்சுகிறதே தவிர, அவர்களின் நற்குணத்தின் வழியாகவோ, நன்னடத்தையின் பலனாகவோ அதை அவர்கள் அடைந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
.
அந்த நன்மதிப்பும் கூட அவர்களின் முகத்திற்க்கு முன்னால் மட்டுமே ஒரு சடங்கிற்காக கொடுக்கப்படும்..
.
ஏனெனில் நம்மிடம் நன்னடத்தைக்கும், நற்பண்புக்கும் மாற்றமாக ஆணவமும், தற்பெருமையும் வெளிப்பட்டால் நம் முகத்துக்கு முன்னால் நம்மிடம் சிரித்து பேசி கடந்து செல்வோர் கூட, நம் முதுகுக்கு பின்னால் நம்மை தூற்றவும், சபிக்கவுமே செய்வார்கள். நமக்காக அக்கரையெடுத்து துஆ செய்யும் எண்ணம் கூட யாருக்கும் இருக்காது. நமக்கெதிராக துஆ செய்ய வேண்டுமானால் நிறைய பேர் இருப்பார்கள். இது தான் நம் செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் கிடைக்கும் போலியான மறியாதையாகும்..
.
ஆனால் நற்குணத்தால் கிடைக்கும் மறியாதை அப்படியல்ல...
.
நம்மிடம் ஆணவமும், தற்பெருமையும் அறவே இல்லாமல், பணிவும், நற்குணமும் வெளிப்பட்டால், நம் முதுகுக்கு பின்னாலும் நாம் நேசிக்கப்படுவோம், மதிக்கப்படுவோம். பலரது பிரார்த்தனையில் நமக்காக என்றும் ஓர் இடமிருக்கும்.
அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள்.
.
உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள்.
.
உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர்கள் வெறுப்பார்கள்.
.
நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்.
.
ஸஹீஹ் முஸ்லிம் : 3778.
.
நாம் யாரை உளமாற நேசித்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோமோ அவர்களே நம்மிடம் உண்மை நன்மதிப்பை பெற்றவர்கள்.
.
இதை உணர்ந்துகொண்டால் செல்வத்தால், செல்வாக்கினால், உரத்த குரல்களால், அதிர்ந்த நடைகளால், கிடைக்கும் நன்மதிப்பை விட, மக்களிடம் நற்குணத்துடனும், பணிவுடனும் நடப்பதன் மூலம் கிடைக்கும் நன்மதிப்பே பெருமதியானது, விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
.
===================
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْحَسَبُ الْمَالُ وَالْكَرَمُ التَّقْوَى " .
( பொதுமக்கள் பார்வையில் ) பொருளாதாரமே நன்மதிப்பாக உள்ளது( உண்மையில் ) கண்ணியம் என்பது இறையச்சமே ஆகும் .என்று நபி (ஸல்) கூறினார்கள் என சமுரா பின் ஜுன்துப் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 4219 தரம் : ஸஹீஹ்
=============
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்கள்..
ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்' எனக் கூறினார்கள்.
.
ஸஹீஹ் புகாரி : 5091
Comments
Post a Comment