தஃவாவின் படித்தரங்கள்
ஒவ்வொரு பணிக்கும் அந்த துறை சார்ந்த அறிவு என்பது அவசியம்.
.
அரபு படிக்காதவர்கள் பயான் செய்யலாம்.. மொழிபெயர்ப்பு ஆதாரங்களை வைத்து கட்டுரைகள் ஆக்கங்கள் தயார் செய்யலாம்..
.
ஆனால் ஃபிக்ஹ் மஸாயில்கள், ஹதீஸ் கலை உள்ளிட்டவைகளில் ஆய்வுகள் செய்து மார்க்க தீர்ப்புகள் வழங்குவதற்கும் அரபு மொழி புலமையும், ஹதீஸ் கலை சார்ந்த அறிவும் அவசியம் என்பதை மறுக்க முடியாது..
.
அந்த பயான்களும், கட்டுரைகளுமே ஆலிம்களின் மேற்பார்வைக்குட்பட்டு இருப்பது கூடுதல் நலனாகும்..
.
காரணம் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் அரபியில் உள்ளன.. மேலும் அரபு படித்தவர்கள் ஏதோ பயானுக்கு குறிப்பு எடுக்கும் அளவில் படிப்பவர்கள் அல்ல.. வாழ்நாளில் குறிப்பிட்ட வருடங்கள் அதற்காகவே ஒதுக்கி உழைப்பை கொடுத்தவர்கள்.
.
சில வேலைகளில் அவர்களின் ஆய்வுகளிலேயே பிழைகள் வருகிறது எனும்போது, அரைகுறை மொழியறிவுடன் செய்யப்படும் ஆய்வுகள் இன்னும் கவனம் எடுக்கப்பட வேண்டியவை..
.
அறிவுக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லை என்பது எந்தளவு உண்மையோ, அதேபோல வேறு மொழியிலிருந்து மார்க்க ஆய்வுகள் செய்வதற்கு அரபு மொழிப் புலமை அவசியம் என்பதும் மறுக்கவியலாத உண்மை..
.
அதே வேலையில்.. மொழியை காரணம் காட்டி ஆலிம் அல்லாதவர்கள் கீழானவர்கள், அரபு படித்தவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், அறிவாளிகள் எனும் வாதமும் ஏற்புடையதல்ல..
.
ஆலிம்கள் என்பதாலேயே சொன்னவுடன் கட்டுப்பட்டு விட வேண்டும் எனும் இந்த வாதம் தவறான, கண்மூடித்தனமாக தக்லீதின் துவக்கப் புள்ளியாக அமைந்துவிடும். எதிலிருந்து சமுதாயத்தை மீட்டோமோ அதன் பக்கமே திரும்ப கொண்டு செல்லும்..
.
மனிதர்கள் வெள்ளி மூலகங்களையும், தங்க மூலகங்களையும் போன்றவர்கள் என்கிறார்கள் நபிகளார்.. அதாவது ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு தன்மை இருப்பது போல, ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு தன்மையும், திறமையும் இருக்கும்.
.
அது என்ன, தனக்கு எது சரியாக வரும் என்பதையறிந்து அந்த துறையில் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவரால் ஆன பங்களிப்பை செய்வது அனைவர் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது.
.
தாஃவா களத்தில் ஒருவருக்கு தாரளமாக பொருளாதாரம் செலவழிக்க முடியும். ஆனால் அவரால் பிரச்சாரம் செய்ய முடியாது..
.
ஒருவருக்கு பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் பொருளாதாரம் அழிக்க முடியாது.
.
இன்னொரு சாராருக்கு இது இரண்டுமே முடியாது. பொருளாதாரமும், பிரச்சாரமும் கொண்டு ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க கடுமையான உடல் உழைப்பை கொடுப்பார்கள்.
.
போஸ்டர் ஒட்டுவார்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குவார்கள், நாற்காலிகளை துடைத்து அடுக்கி வைப்பார்கள், உற்சாகமாக பயான் கேட்க தேநீர் போட்டு கொடுப்பார்கள்..
.
ஆலிம்களிலேயே சிலருக்கு மொழிபெயர்ப்பு பணி நன்றாக வரும். சிலர் தஃப்ஸீர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்வர். சிலர் ஹதீஸ் கலை, சிலர் ஹாஃபிழ்கள், சிலர் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் என பலதுறைகளில் தங்கள் பங்களிப்பை செய்வோர் உண்டு..
.
இவர்களில் யாருடைய பணி இக்லாஸாக அமைந்து, அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறானோ அவர்களே அல்லாஹ்விடம் உயர்ந்தவர்கள் என்கிற பணிவான சிந்தணை தாஃவா களத்திலுள்ள அனைவருக்கும் இருக்க வேண்டும்.
.
இந்த பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது..
.
அதாவது, ஆலிம் அல்லாதவர்களும், தனக்கு எதுபற்றி ஞானமில்லையோ அதில் தர்க்கம் செய்வதை தவிர்த்து ஆய்வுத்துறையை அறிந்தவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு,
.
தனக்கு எதில் அதிக ஆற்றலும் அறிவும் உள்ளது என்பதை அறிந்து அந்த அளவில் தனது பணியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
.
ஆலிம்களும் தனக்கு மொழிப்புலமை இருக்கிறது என்பதற்காக அரபு மொழி அறியாதவர்களெல்லாம் தாஃவா களத்தில் இருக்கவோ, பேசவோ, கேள்விகள் கேட்கவோ தகுதியற்றவர்கள் என்பது போலவும், முற்கால தற்கால ஆலிம்களுக்கு மட்டுமே அறிவு வழங்கப்பட்டுள்ளது என்பது போலவும் பேசுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.
.
பாமரர்கள் கேட்கும் கேள்விக்கு முடிந்தால் ஆதாரங்களை எடுத்துக் காட்டி பதில் சொல்லுங்கள். அது அவர்களுக்கு புரியவில்லை, அவர்கள் ஒரு முடிவில் மணமுரண்டாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் புரிதல் திறன் அவ்வளவு தான் என்பதை உணர்ந்து, ஸலாம் எனக்கூறி அவர்களின் மார்க்க தெளிவுக்காக துஆ செய்துவிட்டு கடந்து செல்லுங்கள்.
.
அதை விடுத்து முற்கால, தற்கால ஆலிம்களுக்கு தெரியாததா ஆலிம் அல்லாதவர்களுக்கு தெரிந்து விட்டது என்கிற திரும்ப திரும்ப முன்வைக்கப்படும் வரட்டு வாதம் நியாயமானதும் தகுதியானதும் அல்ல.. அது உங்களிடம் பதிலில்லாத இயலாமையையே வெளிப்படுத்துகிறது.
.
நீங்கள் குறிப்பிடும் அந்த முற்கால இமாம்களே இத்தகைய கேள்விகளை விரும்ப மாட்டார்கள். காரணம் அவர்களிடம் அறிவு செருக்கு கடுகளவும் காணப்பட்டதில்லை.
.
எழுதப்படிக்க தெரிந்த கவிதைகள் இலக்கியங்கள் அறிந்த, மக்களால் அறிவின் தந்தை என அழைக்கப்பட்ட அபுஜஹ்ல் போன்ற பலரை விட்டுவிட்டு தான், உம்மி நபியையும், அடிமைகளையும் அல்லாஹ் தேர்வு செய்தான்..
.
செல்வத்திலும், ஆட்சியிலும், திறமையிலும் உயர்ந்த ஃபிர்அவ்ன், ஹாமான் போன்றவர்களை விட்டுவிட்டு தான் அல்லாஹ் சரியாக பேசக்கூடத் தெரியாத மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்தான்..
.
சம காலத்தில் கூட ஆலிம்களால் செய்ய முடியாத பல சாதணைகளை தாஃவா களத்தில் ஆலிம் அல்லாதவர்கள் நடத்தும் யூடியூப் சானல்கள் வழியாக செய்கின்றனர். அப்படியான பல யூடியூப் சானல்களை என்னால் இங்கே குறிப்பிட்டு சொல்ல முடியும்..
.
இந்த படிப்பினையெல்லாம் உலகில் அறிவு, செல்வம், அழகு, திறமை போன்ற அருட்கொடைகளை வைத்து பெருமையடிப்போருக்கு அல்லாஹ் கொடுத்த சம்மட்டி அடியாகும்.
.
அல்லாஹ் எப்பொழுதுமே எளியவர்கள் பக்கமே இருப்பான். பெருமையடிப்பவர்கள் பக்கம் அல்ல..
.
அவனுடைய அருட்கொடைகள் எதுவும் பெருமையடிப்பதற்கல்ல. பணிவுடன் அவனுடைய பாதையில் செலவிட்டு அவனிடம் கூலியை எதிர்நோக்குவதற்கு என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவோம்..
=========================
وَمَا يَفْعَلُوا۟ مِنْ خَيْرٍۢ فَلَن يُكْفَرُوهُ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ⭘
அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அ(தற்கான கூலியைப் பெறுவ)தற்கு மறுக்கப்பட மாட்டார்கள். இறையச்சமுடையோரை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல் குர்ஆன் - 3 : 115
.
وَلَا تَتَمَنَّوْا۟ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍۢ ۚ لِّلرِّجَالِ نَصِيبٌۭ مِّمَّا ٱكْتَسَبُوا۟ ۖ وَلِلنِّسَآءِ نَصِيبٌۭ مِّمَّا ٱكْتَسَبْنَ ۚ وَسْـَٔلُوا۟ ٱللَّهَ مِن فَضْلِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيمًۭا⭘
உங்களில் சிலரைவிடச் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் பேராசைப்படாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கான பங்கு உண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததற்கான பங்கு உண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளைக் கோருங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல் குர்ஆன் - 4 : 32
=========================
Follow Tazkiya WhatsApp channel..
Comments
Post a Comment