நட்பு ஓர் இபாதத்

தோழமை என்பது துன்யாவுடன் முடிவதல்ல. மறுமை வாழ்வையும் தீர்மானிப்பதாகும். மூஃமின்கள் தம் அன்றாட செயல்கள் அனைத்தும் அல்லாஹ் ரசூல் காட்டிய வழியில் அமைத்துக் கொள்வதற்கு பெயர் தான் இபாதத் (அடிபணிதல்) ஆகும். அப்படி அமைத்துக் கொண்டால் நாம் நகம் வெட்டும் செயலுக்கு கூட நமக்கு கூலி உண்டு. அதுபோல் தான் நல்ல நண்பனை தேர்வு செய்து மார்க்கம் கூறும் நோக்கில் நட்பு கொண்டு பழகுவது ஒரு இபாதத். அதை மார்க்கம் கூறும் வழியில் அமைத்துக் கொண்டால் அந்த (நட்பில்) அமலில் இறைப் பொருத்தம் இருக்கும். அந்த அமல் (நட்பு) நம்மை சொர்க்கத்தில் சேர்க்கும். நட்பில் மார்க்கம் கூறும் வரையறைகளை புறந்தள்ளி விட்டு தீய அல்லது வீணான காரியங்களில் மட்டும் ஒன்றிணையும் நண்பர்கள் என்பதை அறிந்தும், உலக மகிழ்ச்சிகாக மட்டும் பழகினால் உலக ஆதாயங்கள் கிடைக்கும். ஆனால் அந்த நட்பில் இறைப் பொருத்தம் இருக்காது. அந்த அமல் (நட்பு) நம்மை நரகில் சேர்க்கும். ஆனால் நம்மில் பலர் நட்பை ஒரு இபாதத்தாக பார்ப்பதும் இல்லை. இதனால் மறுமையை நோக்கமாக கொண்டு நட்பு கொள்வதுமில்லை. உலகில் பேசி சிரித்து அரட்டை அடிக்க, வீணான செயல்களுக்கு ஒத்துழைக்கவும், பொழுதை க...