அல்குர்ஆனும் நாமும்.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ 1) இக்ரஃ - ஓதுவீராக (தொடர்ந்து ஓதுவதன் சிறப்புகள்) 📌 அல் குர்ஆனும், மன அமைதியும். الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. அல்குர்ஆன் அர்ரஃது 13:28 📌 நம்மில் சிறந்தவர்…. عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்பிப்பவரே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.புகாரி - 5027 📌 பொறாமைக் கொள்ள தக்க இரு அருட்கொடைகள் لاَ حَسَدَ إِلاَ عَلَى اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْكِتَابَ وَقَامَ بِهِ آنَاءَ اللَّيْلِ وَرَجُلٌ أَعْطَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يَتَصَدَّقُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَار.. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறா...