அல்குர்ஆனும் நாமும்.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

1) இக்ரஃ - ஓதுவீராக (தொடர்ந்து ஓதுவதன் சிறப்புகள்)

📌 அல் குர்ஆனும், மன அமைதியும்.

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. அல்குர்ஆன் அர்ரஃது 13:28

📌 நம்மில் சிறந்தவர்….

عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்பிப்பவரே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.புகாரி - 5027

📌 பொறாமைக் கொள்ள தக்க இரு அருட்கொடைகள்

لاَ حَسَدَ إِلاَ عَلَى اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْكِتَابَ وَقَامَ بِهِ آنَاءَ اللَّيْلِ وَرَجُلٌ أَعْطَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يَتَصَدَّقُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَار..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார். நூல் : புகாரி (5025)

📌  அல்லாஹ்வுக்காகவே வாழும் மக்கள் (அஹ்லுல்லாஹ்):

நபி (ஸல்) அவர்கள்: "மனிதர்களில் அல்லாஹ்வுக்கென்று சில மக்கள் உள்ளனர்" என்றார்கள். "அவர்கள் யார்?" என்று கேட்கப்பட்ட போது, "அவர்கள் குர்ஆனுடையவர்கள்; அவர்கள் அல்லாஹ்வின் கூட்டத்தினர் மற்றும் அவனுக்கே சொந்தமானவர்கள்" என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: இப்னு மாஜா 215

📌  ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மைகள்:

الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2910 | خلاصة حكم المحدث : صحيح

مَن قرأَ حرفًا من كتابِ اللَّهِ فلَهُ بِهِ حسنةٌ ، والحسنةُ بعشرِ أمثالِها ، لا أقولُ آلم حرفٌ ، ولَكِن ألِفٌ حرفٌ وميمٌ حرفٌ

அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மைஉண்டு! ஒருநன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். "அலிஃப், லாம், மீம்’ என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2910 | தரம் : ஸஹீஹ்

📌 தர்மத்தின் நன்மை..

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2560 | خلاصة حكم المحدث : صحيح : الجاهرُ بالقرآنِ ، كالجاهِرِ بالصَّدقةِ ، والمسرُّ بالقرآنِ ، كالمسرِّ بالصَّدقةِ

குர் ஆனை ( உரத்து ) பகிரங்கமாக ஒதுபவர் பகிரங்கமாகத் தர்மம் செய்தவர் போன்றவராவார். குர் ஆனை மெளனமாக ஒதுபவர் இரகசியமாகத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். நூல் : நஸாயீ ( 2561) தரம் : ஸஹீஹ்


📌  உயர்ரக வாகனங்களை விடச் சிறந்தது:

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الصُّفَّةِ، فَقَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطْحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ، فَيَأْتِيَ مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ فِي غَيْرِ إِثْمٍ وَلَا قَطِيعَةِ رَحِمٍ؟» فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، نُحِبُّ ذَلِكَ. قَالَ: «أَفَلَا يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمَ أَوْ يَقْرَأَ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ، وَثَلَاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثٍ، وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ، وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الْإِبِلِ»

(رواه مسلم - 803 / 1336)

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

திண்ணைத் தோழர்களாகிய (அஹ்லுஸ் ஸுஃப்பா) நாங்கள் திண்ணையில் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்து,

"எந்தக் குற்றமும் செய்யாமலும், உறவுகளைத் துண்டிக்காமலும் தினமும் காலையில் ‘புத்ஹான்’ அல்லது ‘அகீக்’ எனும் பள்ளத்தாக்குக்குச் சென்று (அங்கிருந்து) பெரிய திமில்களைக் கொண்ட இரு ஒட்டகங்களை எடுத்துவர உங்களில் யார் விரும்புவார்?" என்று கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம்" என்று கூறினோம்.

அதற்கு நபியவர்கள்: "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று கண்ணியமிக்க அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் 'கற்றுக்கொள்வது' அல்லது 'ஓதுவது' இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் (கற்பது/ஓதுவது) மூன்று ஒட்டகங்களை விடவும், நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த எண்ணிக்கை கொண்ட ஒட்டகங்களைவிட அவருக்குச் சிறந்ததாக அமையும் அல்லவா?" என்று கூறினார்கள். நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 803 | தரம் : ஸஹீஹ்

📌  நபியின் பாராட்டு

977 - حَدَّثَنَا أَبُو كَرَيْبٍ وَمُحَمَّدُ ابْنُ عَمْرٍو السَّواقُ قَالا: حَدَّثَنَا يَحْيَى ابْنَ الْيَمَانِ عَنِ الْمِنْهَالِ بْنِ خَلِيفَةَ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَطَاءِ، عَنِ ابْنِ عَبَّاسِ أَنَّ النَّبِيَّ e دَخَلَ قَبْرًا لَيْلاً. فَأَسْرِجَ لَهُ سِرَاجٌ فَأَخَذَهُ مِنْ قِبَلِ الْقِبْلَةِ وَقَالَ: رَحِمَكَ الله إن كُنتَ لأواها ثلاءً لِلْقُرْآن وَكَبُرَ عَلَيْهِ أَرْبَعًا. قَالَ: وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَيَزِيدَ بْنِ ثَابِتِ. وَهُوَ أَخُو زَيْدِ بْنِ ثَابِتِ. أَكْبَرُ منه. : حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ. وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هذا. وَقَالُوا : يُدْخَلُ الْمَيْتُ الْقَبْرَ مِنْ قِبَلِ الْقِبْلَةِ. وَقَالَ بَعْضُهُمْ: يُسَلُّ سَلاً. وَرَخَّصَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ فِي الدَّفَنِ بِاللَّيْلِ.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் ஒரு கப்று (குழி)க்குள் இறங்கி (ஒருவரது ஜனாஸாவை அடக்கி அடக்கி)னார்கள். அப்போது (வெளிச்சத்திற்காக) விளக்கேற்றப்பட்டது. அப்போது நபி (ஸல) அவர்கள் இறந்தவ ரது உடலை, (தொழும் திசையான) கிப்லா திசையிலிருந்து வாங்கி,

"அல்லாஹ், உமக்கு அருள் புரியட்டும்.  நிச்சயமாக நீர் அதிகமாக இறைவனை அஞ்சுபவராகவும் *குர்ஆனை அதிகமாக ஓதுபவராகவும்* இருந்தீர் என்று கூறினார்கள். மேலும்,அவருக்காக நான்கு முறை தக்பீர் கூறினார்கள். ஜாமிஉத் திர்மிதீ 1054 (சில பதிப்புகளில் 977 / சுனன் இப்னு மாஜா: 1522 / சுனன் அபூதாவுத்: 3171

📌 சிரமப்பட்டு ஓதுபவருக்கு இரட்டிப்பு நன்மை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் கண்ணியமிக்க வானவர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன". ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 798, திர்மிதீ 

📌 கூட்டாக ஓதுவோருக்கு அமைதியும் அருளும் சூழ்ந்துகொள்ளுதல்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் இல்லங்களில் ஒன்றில் மக்கள் கூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி மனனம் செய்யும் போது, அவர்கள் மீது அமைதி இறங்குகிறது; அருள் அவர்களை அரவணைக்கிறது; வானவர்கள் அவர்களைச் சூழ்கின்றனர்.. ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 2699 (5231) 

📌  ஷைத்தான் நுழையாத இல்லம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் இல்லங்களைக் (அல்குர்ஆன் ஓதப்படாத) மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக, சூரா அல்-பகரா ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் வெறித்தோடுகிறான்." ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 1300 (780)

📌 நோன்பும் குர்ஆனும் மறுமையில் சிபாரிசு செய்யும்

الصِّيامُ والقرآنُ يشفَعانِ للعبدِ يومَ القيامةِ يقولُ الصِّيامُ أي ربِّ منعتُهُ الطَّعامَ والشَّهواتِ بالنَّهارِ فشفِّعني فيهِ ويقولُ القرآنُ منعتُهُ النَّومَ باللَّيلِ فشفِّعني فيهِ قالَ فَيشفَّعانِ  الراوي : عبدالله بن عمرو | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 10/118 | خلاصة حكم المحدث : إسناده صحيح

ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக் கூடியவைகளாக இருக்கும்.நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’.குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹ்மத் 10/118 | தரம் : ஸஹீஹ்

📌 குர்ஆனின் அளவிலா பரிந்துரை.

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2915 | خلاصة حكم المحدث : حسن

يَجيءُ القرآنُ يومَ القيامةِ فيَقولُ: يا ربِّ حلِّهِ، فَيلبسُ تاجَ الكَرامةِ، ثمَّ يقولُ: يا رَبِّ زِدهُ، فيلبسُ حلَّةَ الكرامةِ، ثمَّ يقولُ: يا ربِّ ارضَ عنهُ، فيقالُ لَهُ: اقرأْ وارْقَ، وتزادُ بِكُلِّ آيةٍ حسنةً

மறுமை நாளில் அல்குர்ஆன் வரும். அப்போது அது, இரட்சகனே! இவருக்கு ஆடை அணிவிப்பாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும். அது மீண்டும், இரட்சகனே! இவருக்கு மேலும் வழங்குவாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். மீண்டும் அது, இரட்சகனே! இவரை நீ பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும், அப்போது நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும் என்று அவருக்குக் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள். நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2915 | தரம் : ஹசன் 

📌 ஓதுபவருக்கு பரிந்துரையும், ஓதாமல் விட்டவருக்கு நரகமும்.

الراوي : جابر بن عبدالله وابن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 4443 | خلاصة حكم المحدث : صحيح

القرآنُ شافع مُشفَّعٌ ، وماحِلٌ مصدَّقٌ ، مَنْ جعلَهُ أمامَهُ قادَهُ إلى الجنةِ ، ومَنْ جعلَهُ خلْفَهُ ساقَهُ إلى النارِ

குர்ஆன் பரிந்துரை செய்யும். அதன் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், ஒருவருக்காகக் குர்ஆன் வாதிட்டால் அதனுடைய வாதம் ஏற்றுக்கொள்ளப்படும்.தனக்கு முன்னால் அதை வைத்துக் கொள்பவரை, அது சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும். முதுகுக்குப் பின்னால் அதைப் போட்டுவிடுபவரை, நரகத்தில் தள்ளிவிடும்.

நூல் : ஸஹீஹ் ஜாமி ( 4443) | தரம் : ஸஹீஹ்

📌 மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை) குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள்.அப்போது நான், "(அதைவிடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது" என்று கூறினேன்.

"அப்படியானால் இருபது இரவுகளில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். அப்போதும் நான், "(அதை டவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதீர்!" என்று சொன்னார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 2139.

ஓதாமல் விடுவது  ஏற்படும் விளைவுகள்.

📌நபியின் புகார்..

وَيَوْمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَـٰلَيْتَنِى ٱتَّخَذْتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلًۭا⭘

அந்நாளில் அநியாயக்காரன், “இத்தூதருடன் நானும் சரியான வழியை எடுத்திருக்கலாமே!

يَـٰوَيْلَتَىٰ لَيْتَنِى لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًۭا⭘

எனக்கு ஏற்பட்ட கேடே! இன்னாரை நான் நண்பனாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கக் கூடாதா?

لَّقَدْ أَضَلَّنِى عَنِ ٱلذِّكْرِ بَعْدَ إِذْ جَآءَنِى ۗ وَكَانَ ٱلشَّيْطَـٰنُ لِلْإِنسَـٰنِ خَذُولًۭا⭘

என்னிடம் அறிவுரை வந்த பிறகும் அதிலிருந்து அவன் என்னை வழிகெடுத்துவிட்டான். ஷைத்தான், மனிதனுக்கு மோசடி செய்பவனாக இருக்கிறான்” என்று தனது கைகளைக் கடித்தவாறு கூறுவான்.

அல் குர்ஆன் - 25 : 27,28,29

وَقَالَ ٱلرَّسُولُ يَـٰرَبِّ إِنَّ قَوْمِى ٱتَّخَذُوا۟ هَـٰذَا ٱلْقُرْءَانَ مَهْجُورًۭا

என் இறைவனே ! இந்தக் குர்ஆனை என் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டனர்” என்று தூதர் கூறுவார்.. அல் குர்ஆன் - 25 : 30

📌  தொடர்பில்லாதவரின் உள்ளத்தை விட்டும் குர்ஆன் வேகமாக ஓடிவிடும்.


تعَلَّموا كِتابَ اللهِ واقْتَنُوه، وتَغَنَّوْا به, فوالذي نفْسُ محمَّدٍ بيَدِه، لَهو أشَدُّ تَفَلُّتًا مِنَ المَخاضِ مِنَ العُقُلِ.

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2964 | خلاصة حكم المحدث : صحيح

நபி ஸல் கூறினார்கள் .குர் ஆனை கற்று கொள்ளுங்கள் ! அதை அழகான குரலில் ஒதுங்கள் ! அதை  செய்து கொள்ளுங்கள் ! எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக இந்த குர் ஆன் கயிற்றில் கட்டப்பட்ட ஒட்டகத்தை விட உள்ளத்தை விட்டும் விரைந்து ஒடி விடக் கூடியதாகும். உக்பத் இப்னு ஆமிர் ( ரலி ), நூல் : தாரமி (3391) தரம் : ஸஹீஹ்

📌 குர்ஆன் தனக்கு எதிராகவே சாட்சியளிக்கும்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "...குர்ஆன் உனக்கு ஆதரவான சான்றாகவும் இருக்கும்; அல்லது உனக்கு எதிரான சான்றாகவும் இருக்கும்". ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 381 

📌 நரகத்தில் தள்ளிவிடும்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "குர்ஆன் பரிந்துரை செய்யும்; அதன் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். தனக்கு முன்னால் அதை வைத்துப் பின்பற்றுபவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும்; முதுகுக்குப் பின்னால் அதைப் போட்டு (புறக்கணித்து)விடுபவரை நரகத்தில் தள்ளிவிடும்". ஆதாரம்: ஸஹீஹ் அல்-ஜாமிஃ 4443 

📌 குர்ஆனை ஓதாதவரின் உவமை:

مَثَلُ مؤمن الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ ومَثَلُ مؤمن الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ ، وَلاَ رِيحَ لَهَا وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ ، وَلاَ رِيحَ لَهَا..

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1 . குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று.
2 . மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரிச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது.
3 . தீயவனாக (நயவஞ்சகனாக)வும் இருந்துகொண்டு, குர்ஆனையும் ஓதிவருகிறவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு.
4 . தீமையும் செய்துகொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு; அதற்கு வாசனையும் கிடையாது. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) (புகாரி: 5020)


2) தர்தீல் - திருத்தமாக - தெளிவாக (ஓதுவதன் சிறப்புகள்)


اَوْ زِدْ عَلَیْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا ۟ؕ

“(இரவு தொழுகையில்) சற்று நேரத்தை அதிகபடுத்தி, அல்குர்ஆனைத் தெளிவாகவும், நிதானமாகவும் ஓதுவீராக!” -அல்குர்ஆன் 73:4


📌 குரலால் அழகுபடுத்தல்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ ".

உங்கள் குரல்வளங்களால் குர் ஆனை அலங்கரியுங்கள் என நபி ஸல் கூறியதாக பராஉ பின் ஆஸிப் ரலி, நூல் : நஸாயீ 1015 | தரம் : ஸஹீஹ்

📌 நபியின் கிராத்..

நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?” என அனஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், “நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம்” என்று கூறிவிட்டு, “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் “பிஸ்மில்லா...ஹ்’ என நீட்டுவார்கள்; “அர்ரஹ்மா...ன்’ என்றும் நீட்டுவார்கள்; “அர்ரஹீ...ம்’ என்றும் நீட்டுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: கதாதா, நூல்: புகாரி (5046)

📌 ஓசையை நீட்டி ஓதவேண்டும்.

عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كَانَ يَمُدُّ صَوْتَهَ مَدًّا

நான் அனஸ் பின் மாலிக் ( ரலி ) அவர்களிடம் “ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் குர் ஆன் ஓதல் எவ்வாறு அமைந்திருந்தது ?” என்று வினவினேன். அதற்கு அவர்கள்,” நபி ஸல் அவர்கள் தாம் ஓதும் குர் ஆன் ஓசையை நன்கு நீட்டி ஓதிவந்தார்கள் என்று விடையளித்தார்கள்.இதை கத்தாதா பின் தி ஆமா ( ரஹ் ) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : நஸாயீ ( 1014 ) ஸஹீஹ்

நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் தொடர்பாக உம்மு ஸலமா (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது, ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம், அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன், அர்ரஹ்மானிர்ரஹீம், மாலிக்கி யவ்மித்தீன்’ என்பதை ஒவ்வொரு ஆயத்தாக நிறுத்தி நிறுத்தி ஓதுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ முலைக்கா, நூல்கள்: அபூதாவுத் (3487), திர்மிதீ (2851), அஹ்மத் (25371)

📌 அல்லாஹ் விரும்புகிறான்.

474-(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ . وفي رواية لهما : مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِلنَّبِيِّ أَنْ يَتَغَنَّى بِالْقُرْآنِ . وفي رواية للبخاري قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ .

474. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: அல்லாஹ், தன் தூதர் ஒருவர் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதும்போது அதைச் செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று வேறு எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை. 

(புகாரீ: 7544, முஸ்லிம்: 792) புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களிலும் மற்றோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாவது: “நான் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதனையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 7482) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக புகாரீயின் மற்றோர் அறிவிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது: குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர். (புகாரீ: 7527). (மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 474)

📌 நபியின் பாராட்டு.

475- (ق) عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ .

وزاد عند مسلم في أوله : لَوْ رَأَيْتَنِي وَأَنَا أَسْتَمِعُ لِقِرَاءَتِكَ الْبَارِحَةَ .

475. அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) “அபூமூஸா! (இறைத்தூதர்) தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என என்னிடம் கூறினார்கள். 

(புகாரீ: 5048, முஸ்லிம்: 793) 

முஸ்லிம் நூலில் இதன் தொடக்கத்தில் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளதாவது: (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), “நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்)” என்று என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 475)


📌 நபியின் நெகிழ்ச்சியும் புகழ்ச்சியும்.

477- عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ أَبْطَأْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بَعْدَ الْعِشَاءِ ثُمَّ جِئْتُ فَقَالَ أَيْنَ كُنْتِ قُلْتُ كُنْتُ أَسْتَمِعُ قِرَاءَةَ رَجُلٍ مِنْ أَصْحَابِكَ لَمْ أَسْمَعْ مِثْلَ قِرَاءَتِهِ وَصَوْتِهِ مِنْ أَحَدٍ قَالَتْ فَقَامَ وَقُمْتُ مَعَهُ حَتَّى اسْتَمَعَ لَهُ ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ هَذَا سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي أُمَّتِي مِثْلَ هَذَا . صحيح .

477. அப்துர் ரஹ்மான் பின் ஸாபித் அல்ஜுமஹீ ரளியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இஷாவுக்குப்பின் ஓர் இரவில் தாமதமாக வந்தேன். இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்? என்று என்னிடம் நபியவர்கள் வினவினார்கள். உங்களுடைய தோழர்களுள் ஒருவர் குர்ஆன் ஓதுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருடைய ஓதலைப் போன்றும் குரலைப் போன்றும் யாரிடமிருந்தும் நான் (இதுவரை) செவியுற்றதில்லை என்று கூறினேன். எனவே அவர்கள் எழுந்து சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். அவர் ஓதுவதைச் செவியுற்றார்கள். பின்னர் என்னைத் திரும்பிப் பார்த்து, “இவர் அபூஹுதைஃபாவின் முன்னாள் அடிமை சாலிம் ஆவார். இவரைப் போன்றவரை என் சமுதாயத்தில் ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்கள். 

(இப்னுமாஜா: 1328/1338)  இது 'ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். (மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 477)


📌 குர்ஆனின் அழகே அழகிய ஓதல் தான்.

480- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ لِكُلِّ شَيْءٍ حِلْيَةً ، وَحِلْيَةُ الْقُرْآنِ الصَّوْتُ الْحَسَنُ .

● إسناده حسن .

480. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அழகு உண்டு. குர்ஆனின் அழகு அழகிய குரல்தான். 

(அல்அஹாதீஸுல் முக்தாரா: 7/2496) இதன் அறிவிப்பாளர் தொடர் 'ஹஸன்' தரத்தில் அமைந்துள்ளது.

(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 480)

📌 ஓதல் முறையே இறையச்சம் தர வேண்டும்.

481-عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  أَيُّ النَّاسِ أَحْسَنُ قِرَاءَةً ؟ قَالَ : الَّذِي إِذَا سَمِعْتَهُ يَقْرَأُ رَأَيْتَ أَنَّهُ يَخْشَى اللَّهَ  عَزَّ وَجَلَّ .

● رجاله ثقات .

481. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அழகிய முறையில் ஓதுபவர் யார்?” என்று கேட்கப்பட்டது. “அவர் ஓதுவதை நீ செவியுற்றால், அவர் வல்லமையும் மகத்துவமும் கொண்ட அல்லாஹ்வை அஞ்சு(ம் நிலையில் ஓது)கிறார் என நீ கருதுவாய்” என்று பதிலுரைத்தார்கள். 

(அல்அஹாதீஸுல் முக்தாரா: 11/223)  இதன் அறிவிப்பாளர்கள் உறுதியானவர்கள். (மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 481)

📌  தலைமை தாங்க தகுதி படைத்தவர்

إِذَا كَانُوا ثَلاَثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ وَأَحَقُّهُمْ بِالإِمَامَةِ أَقْرَؤُهُمْ ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.

அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம் (1191)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே (அதிகமாக கற்றவரே) அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்." ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 1078 (672)

📌  அல்குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவரிடமே அதை கற்க வேண்டும்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

(புகாரி: 3758)


3. திலாவத் - பின் தொடர்தல் மற்றும் வாசித்தல்

📌 அல்குர்ஆன் ஓதும் முறை

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖ اُولٰٓٮِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ‌ وَمَنْ يَّكْفُرْ بِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ

எவர்களுக்கு நாம் வேதத்தை அருளியிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள். அவர்கள் இதன் மீது (இந்தக் குர்ஆன் மீது உண்மையான உள்ளத்துடன்) நம்பிக்கை கொள்கின்றார்கள். இன்னும் எவர்கள் இதனைக் குறித்து நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கிறார்களோ அவர்களே உண்மையில் நஷ்டமடைந்தவர்களாவர்.

(அல்குர்ஆன் : 2:121)


📌 அறிவில்லாமல் பின்பற்றுவதல் கூடாது.

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۚ إِنَّ ٱلسَّمْعَ وَٱلْبَصَرَ وَٱلْفُؤَادَ كُلُّ أُو۟لَـٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْـُٔولًۭا⭘

உமக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்! செவி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றும் அதுகுறித்து விசாரிக்கப்படுவதாகும்.

அல் குர்ஆன் - 17 : 36

📌 சிந்திக்க வேண்டும்.

أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلْقُرْءَانَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَآ⭘

இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லது (அவர்களின்) உள்ளங்களில் அதற்குரிய பூட்டுகள் உள்ளனவா? அல் குர்ஆன் - 47 : 24

📌 அல்குர்ஆன் இறைவனின் அறிவுரை ஆகும்.

يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. (அல்குர்ஆன் யூனுஸ் 10:57)

📌 நபிக்கு வழங்கப்பட்ட அற்புதம்

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلاَّ أُعْطِيَ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَىَّ فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تابِعًا يَوْمَ الْقِيَامَةِ "

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். (ஸஹீஹ் புகாரி : 4981)

📌  ஆறு எச்சரிக்கைகள்

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَادِرُوا بِالْأَعْمَالِ سِتًّا: إِمْرَةَ السُّفَهَاءِ، وَكَثْرَةَ الشُّرَطِ، وَبَيْعَ الْحُكْمِ، وَاسْتِخْفَافًا بِالدَّمِ، وَقَطِيعَةَ الرَّحِمِ، وَنَشْئًا يَتَّخِذُونَ الْقُرْآنَ مَزَامِيرَ، يُقَدِّمُونَ الرَّجُلَ لِيُغَنِّيَهُمْ بِالْقُرْآنِ وَإِنْ كَانَ أَقَلَّهُمْ فِقْهًا»

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: 'ஆறு விஷயங்கள் நிகழும் முன் நல்ல செயல்களைச் செய்யத் தொடங்குங்கள்: 1. முட்டாள்களின் ஆட்சி, 2. காவலர்கள் (போலீஸ்)அதிகரித்தல், 3. நீதியை விற்பது, 4. உறவுகளை துண்டித்தல், 5. கொலை அசாதாரணமாகுதல் 6. வாலிபர்கள் திருக்குர்ஆனை இசைத்து ஓதுவார்கள் அப்போது, தொழுகையிலோ, சபையிலோ ஒரு மனிதன் ,அவர்களில் சிறந்தவர் என்ற அடிப்படையிலோ (அவருடைய) மார்க்க அறிவினாலோ,கல்வியினாலோ முன்னுரிமை பெறாமல் தனது குரலின் அழகுக்காக (இசையில்) முன்னுரிமை பெறுவான். (நூல் - அல்-ஸில்ஸிலா அல்-சஹீஹா- 979)

4) ஹிஃப்ழ் - மனனம் செய்தல் (அதன் சிறப்புகள்)


📌கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படும் வேதம்.

بَلْ هُوَ ءَايَـٰتٌۢ بَيِّنَـٰتٌۭ فِى صُدُورِ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَـٰتِنَآ إِلَّا ٱلظَّـٰلِمُونَ⭘

எனினும், இவை அறிவு வழங்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இருக்கும் தெளிவான வசனங்களாகும். அநியாயக்காரர்களைத் தவிர வேறெவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். அல் குர்ஆன் - 29 : 49


📌 ஓதும் அளவுக்கு உயர்வுண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆன் ஓதிவந்தவரிடம் (மறுமையில்), “ஓது! உயர்ந்து செல்! உலகில் நீ சரியான முறையில் ஓதியதைப் போன்று சரியான முறையில் (இங்கும்) ஓது! உன்னுடைய தகுதி (உயர்வு) நீ ஓதிய இறுதி வசனத்தின் அடிப்படையில் (கணக்கிட்டு) அமையும்” என்று சொல்லப்படும்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூதாவுத் (1252), திர்மிதீ (2838), அஹ்மத் (6508)

📌 குர்ஆனை சுமந்திருப்பவரின் பண்பாடு

492- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدَرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لَا يُوحَى إِلَيْهِ ، لَا يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَحِدَّ مَعَ مَنْ حَدَّ ، وَلَا يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلَامُ اللَّهِ تَعَالَ . ● قال الذهبي : صحيح .

492. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: யார் குர்ஆனை ஓதினாரோ அவர் நபித்துவத்தைத் தம் இரு புறங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக்கொண்டுவிட்டார் (என்று பொருள்). எனினும் அவருக்கு வஹீ அறிவிக்கப்படுவதில்லை. குர்ஆனை உடையவர் (மனனம் செய்தவர்) தம்முடன் கோபப்படுபவர் மீது கோபப்படக்கூடாது. தம்மோடு அறிவற்ற நிலையில் நடந்து கொள்பவரோடு அறிவற்ற நிலையில் நடந்துகொள்ளக்கூடாது. (ஏனென்றால்) அவருடைய உள்ளத்தில் உயர்ந்தோன் அல்லாஹ்வின் கலாம் (பேச்சு) உள்ளது.

(ஹாகிம்: 2028) - இது ‘ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்.


Comments

Popular posts from this blog

ஆடம்பரமும் அதன் அளவுகோலும் ஓர் ஆய்வு

நட்பு ஓர் இபாதத்

இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் மற்றும் முஷ்ரிக்..