நபி வழியில் கபுர் ஜியாரத் ..
கபுர் ஜியாரத் என்ற நபிவழி மார்க்கத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த நபிவழியை தர்காவில் செய்யும் அமல் என்று பலர் கருதி வருகின்றனர்.இது முற்றிலும் தவறு..கபுர் ஸியாரத்துக்கும் தர்காவுக்கும் சம்பந்தமேயில்லை..ஏன் இஸ்லாத்திற்கும் தர்காவுக்குமே சம்பந்தமே இல்லை என சொல்லலாம்.. (அலீ (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது படைத்தளபதியாக இருந்த அபுல்ஹய்யாஜ் அல் அஸதி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம்.. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) "உயர்ந்துள்ள எந்தக் கப்றையும்" தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதி (ரஹ்) நூல்: முஸ்லிம் 1764 கபுர்கள் காரையால் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர்...