சலஃபியிஸ வரலாறு 1

சவூதி அரசு உலகெங்கும் தாஃவா செண்டர் ஏஜெண்டுகளை அமைத்து பண உதவி செய்து பிரச்சாரம் செய்துவரும் வஹ்ஹாபிசம் அதாவது இன்றைய சலஃபியிச கொள்கை, உண்மையில் குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் தூய இஸ்லாமாக இருந்தால், சவூதி அரேபியா இந்நேரம் இஸ்லாம் கூறும் சீர்த்திருத்தத்தை நோக்கி சென்றிருக்க வேண்டும்... ஆனால் நிலமையோ இன்று அப்படியில்லை.

மென்மேலும் மேற்கத்திய யூத கலாச்சாரத்தை நோக்கியே நகர்கிறது. இனி அப்படித்தான் நகரும் என்றும், அரேபியா இன்னும் சில ஆண்டுகளில் புதிய ஐரோப்பாவாக மாறும் என சவூதி முடி இளவரசராக இருக்கும் யூத கைப்பாவை வெளிப்படையாக அறிவித்துள்ளது.

நாடே இஸ்லாமிய சட்டத்தை கொண்டுள்ள நாடு என்று சொல்கிறார்கள்., நாட்டின் குடிமக்களெல்லாம் முஸ்லிம்ளாக இருக்கும் சூழல்.. இஸ்லாமிய சீர்திருத்தங்களை அந்த அரசே முழுமையாக செய்ய அங்கே தடையேதும் இருக்கிறதா ? 

எந்த தடையும் இல்லாத சூழலில் விரும்பியே அவர்கள் இஸ்லாம் வெறுக்கும் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி நகர்கிறார்கள் என்றால் அதற்கு பின்னாலிருக்கும் மர்ம அரசியலை யூதர்களுடன் இவர்கள் காட்டும் நெருக்கத்தை மையமாக வைத்து யோசிக்க வேண்டியுள்ளது.. 

சவூதியின் யூத பாசம் வெகு காலமான உள்ளதுதான் என்றாலும், தற்போது மாறிவரும் சவூதி அரேபியாவின் தற்கால நகர்வுகளையும்,.

இறுதி காலத்தில் யூத கலாச்சாரத்தை நோக்கி நகர்வார்கள், இன்னும் அரேபியர்கள் சிலை வணக்கம் செய்யுமளவுக்கு சென்று விடுவார்கள் என்பன போன்ற நபிகளாரின் முன்னறிவிப்புகளையும் ஒப்பிட்டு சிந்தித்து பார்த்தால்..

சவூதியில் இஸ்லாம் எனும் பெயரில் நடைமுறையில் இருக்கும் சலஃபியிச கொள்கையானது, தன்னை தவ்ஹீத் கொள்கை என சொல்லிக் கொண்டே,

முஸ்லிம் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கியாம நாள் அடையாளங்களான யூத கலாச்சாரத்தை நோக்கி நகர்த்தி செல்கின்ற வழிகெட்ட கொள்கை தானே தவிர, ஒரு போதும் அல்குர்ஆன் கூறும்  தூய இஸ்லாம் ஆகாது என்கிற முடிவுக்கே வரலாம். மக்கள் இக்கொள்கையிலிருந்து எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.

ஒருவர் இருவர் அல்ல.. ஒரு நாட்டையே அதுவும் இஸ்லாமிய வரலாறுகளை சுமந்த நாட்டையே யூத கலாச்சாரம் நோக்கி நகர்த்த வேண்டுமென்றால் அதை ஓரிரு நாட்களில் செயல்படுத்த சாத்தியமேயில்லை.

அதற்கு முதலில் முஸ்லிம்களை தீனை விட்டு தூரமாக்க வேண்டும்.

பின்பு கலாச்சார ரீதியாக மாற்றியமைத்து பொழுதுபோக்குகளில் மூழ்கடிக்க வேண்டும். (அதன் துவக்கம் தான் சவூதியில் தியேட்டர்கள் துவக்கம், பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகள் என ஏராளம் )

அதற்கு முஸ்லிம்களை குர்ஆன் ஹதீஸ் எனும் இறைவாக்கை நேரடியாக படிப்பதிலிருந்து தடுத்து மதகுருமார்களின் விளக்கங்கள் எனும் பெயரில் திட்டவட்டமான சட்டங்களை சற்று தளர்த்தி கூற வைக்க வேண்டும். அதாவது இஸ்லாத்தில் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பாவங்களை சாதரணமாக காட்ட வேண்டும்.. ( இதுதான் சலஃபியிசத்தின் மூலமாக பலகாலமாக சவூதியில் நடக்கிறது )

இதற்கான அஜண்டாவாக இவர்கள் கையிலெடுத்துள்ள கொள்கை தான் இஸ்லாமிய சாயல் பூசப்பட்ட சலஃபியிசம்.

அதாவது குர்ஆன் ஹதீஸை விட்டு மக்களை தூரமாக்கி மக்களை மார்க்க அறிஞர்கள் எனப்படும் மதகுருமார்களை நேசிப்பதன் பக்கம் தள்ள வேண்டும்.

மார்க்க அறிஞராக இருந்தாலும் அவருக்கென்று தனி அந்தஸ்து மறியாதையெல்லாம் கிடையாது, அனைவரும் மார்க்கத்தின் பார்வையில் சமம் என்று கூறும் இஸ்லாத்தில்,

குறிப்பிட்ட நபர்களை ஷெய்கு, அமீர் என்று அழைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கி, அவர்கள் மார்க்கம் என எது சொன்னாலும் சரியாக இருக்கும் என நம்புமளவுக்கு அவர்களுக்கு கண்ணியம் செய்ய வைத்து, அவர்கள் மூலமாக குரானுக்கு நபிகளார் கொடுத்த விளக்கங்களுக்கு மாற்றமான விளக்கங்களை கொடுத்து, முஸ்லிம்களிடையே பிரிவினையை தூண்ட வேண்டும் என்பதுதான் யூதர்களோடு நெருக்கமான சலஃபியிசத்தின் நோக்கம்.

( இதே பிரிவினை நோக்கங்களோடு மதகுருமார்கள் எனப்படுவோர் மூலமாக யூதர்களால் முஸ்லிம்களிடையே புகுத்தப்பட்டவை தான் இறைவேதத்தில் இல்லாத சூஃபிசம்  ஷியாயிசம், அஹ்லே குர்ஆன், தர்கா வழிபாடுகள், அஹ்மதியா ஜமாத் போன்ற பல பிரிவுகள் )

யூதர்களின் நூற்றாண்டுகால இந்த அஜண்டாவில் சிந்திக்காமல் அல்லது பணத்தாசையால் சிக்கியிருக்கும் கூட்டம் தான் உள்ளூர் சலபி கூட்டம்..

மேலும் இத்திட்டங்களில் யூதர்களின் நோக்கமும் ஆதிக்கமும் என்ன,  என்பது பற்றிய வரலாற்று ஆதாரங்களுடன் கூடுதல் தகவல் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்...

Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!