Posts

Showing posts from 2024

ஆய்வும் தக்லீதும்

Image
 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ மொழிபெயர்ப்புகளே மார்க்கம் ஆதாரம் என நம்பிவிடுவது தான் பல குழப்பங்களுக்கு காரணமாக அமைகிறது.மொழிபெயர்ப்பு என்பது அந்த மொழிபெயர்ப்பாளரின் புரிதலின் வெளிப்பாடு மட்டுமே. ஒருவர் எந்த சிந்தனையில் உள்ளாரோ அந்த சிந்தனைக்கு ஏற்றவாரே ஒரு வசனம் அல்லது ஹதீஸின் மொழிபெயர்ப்பை செய்வார். எவ்வளவு கற்றுதேர்ந்த அறிஞரானாலும், அவருக்கும் இவ்வுலகில் “ஒரு பறவை கொத்தியெடுக்கும் நீரின் அளவிலிருந்து குறிப்பிட்ட பங்கு” அறிவு தான் வழங்கப்பட்டுள்ளது எனும்போது, ஒரு எழுத்துக்குள் ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வார்த்தைகளை யாராலும் பரிபூரணமாக மொழிபெயர்க்கவே முடியாது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தங்களால் இயன்றளவு அந்தந்த காலத்திற்கு ஏற்றார்போல் சிறந்த சொல்லாடலை தருகிறார்கள் அவ்வளவே. அந்த கருத்துக்கள் அவர்  கல்வி கற்ற சூழல், கற்பித்த ஆசிரியர்களின் அகீதா, அவர்கள் அல்குர்ஆன் ஹதீஸை அணுகும் கோணங்களை பொருத்து  மாறுபடும். இதை நீங்கள் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஒன்றாக வைத்து ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். மேலும், அல்குர்ஆன் மூல மொழியில் காலத்திற்கும் ...

இஸ்லாத்தில் பட்டப்பெயர்கள்

தமது கொள்கைக்கு மாற்றுக் கருத்தில் உள்ளவர்களை பட்டப்பெயர் வைத்து இழிவுபடுத்துவது முஸ்லிம்கள் சிலரிடம் உள்ள தீய பழக்கமாகும். . இஸ்லாம் ஒருபோதும் தீய பட்டப்பெயர்கள் வைப்பதை ஆதரிக்கவில்லை. அதற்கு எதிராகவே பேசுகிறது. . يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌۭ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًۭا مِّنْهُمْ وَلَا نِسَآءٌۭ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًۭا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَـٰبِ ۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَـٰنِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ⭘  இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம், மற்றொரு சமுதாயத்தை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள், இவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும், மற்றப் பெண்களை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களைவிடச் சிறந்தோராக இருக்கலாம். உங்களுக்குள் (ஒருவரையொருவர்) குறை கூறிக் கொள்ளாதீர்கள். (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள். இறைநம்பிக்கைக்குப்பின் தீய பெயர்களைச் சூட்டுவது மிகக் கெட்டது. யார் பாவ மன்னிப்புத் தேடவில்லையோ அவர்களே...

மறுமை வெற்றிக்கு மட்டுமா தாஃவா ?

கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம்.  அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லா...