Posts

Showing posts with the label அநீதி

ஆய்வும் தக்லீதும்

Image
 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ மொழிபெயர்ப்புகளே மார்க்கம் ஆதாரம் என நம்பிவிடுவது தான் பல குழப்பங்களுக்கு காரணமாக அமைகிறது.மொழிபெயர்ப்பு என்பது அந்த மொழிபெயர்ப்பாளரின் புரிதலின் வெளிப்பாடு மட்டுமே. ஒருவர் எந்த சிந்தனையில் உள்ளாரோ அந்த சிந்தனைக்கு ஏற்றவாரே ஒரு வசனம் அல்லது ஹதீஸின் மொழிபெயர்ப்பை செய்வார். எவ்வளவு கற்றுதேர்ந்த அறிஞரானாலும், அவருக்கும் இவ்வுலகில் “ஒரு பறவை கொத்தியெடுக்கும் நீரின் அளவிலிருந்து குறிப்பிட்ட பங்கு” அறிவு தான் வழங்கப்பட்டுள்ளது எனும்போது, ஒரு எழுத்துக்குள் ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வார்த்தைகளை யாராலும் பரிபூரணமாக மொழிபெயர்க்கவே முடியாது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தங்களால் இயன்றளவு அந்தந்த காலத்திற்கு ஏற்றார்போல் சிறந்த சொல்லாடலை தருகிறார்கள் அந்த கருத்துக்கள் அவர்  கல்வி கற்ற சூழல், கற்பித்த ஆசிரியர்களின் அகீதா, அவர்கள் அல்குர்ஆன் ஹதீஸை அணுகும் கோணங்களை பொருத்து  மாறுபடும். இதை நீங்கள் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஒன்றாக வைத்து ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். மேலும், அல்குர்ஆன் மூல மொழியில் காலத்திற்கும் மாற்ற முட...

தலாக் சட்டங்கள்..

Image
க ணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்து அது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும்பொழுது விவாகரத்து என்ற முடிவுக்கு வருவது உலகில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களிடமும் கடைபிடிக்கப்படும் ஒரு பொதுவான நடைமுறையாகும். என்றாலும், முஸ்லிம்கள் செய்யும் விவாகரத்து மட்டும் இந்த நாட்டில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் முஸ்லிம்களிடமே தலாக் சட்டங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை தான்.  இதனால் எடுத்த எடுப்பிலெல்லாம் தலாக் கூறி பெண்களுக்கு அநீதி இழைக்கும் நிலை இந்தச் சமுதாயத்தில் உருவாகி, தற்போது சங்பரிவார கும்பலின் தூண்டுதலால் உச்சநீதிமன்றம் இதில் தலையிடும் அளவுக்கு வந்துள்ளது. நினைத்தவுடனே தலாக் சொல்லி மணமுறிவு செய்துகொள்வதையோ, பல வருடகால பந்தத்தை 'முத்தலாக்' என ஒரே வார்த்தையில் சில நொடிகளில்  முடித்துக் கொள்வதையோ இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை... கணவன் மனைவியிடையே மனக்கசப்புகள் ஏற்பட்டால் தலாக் என்ற நிலைக்கு வருவதற்கு முன் அவர்களிடையே இணைப்பை ஏற்ப்படுத்தும்  முயற்...