Posts

Showing posts with the label வழிகெட்ட

வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள்.

ஏக இறைவனின் திருப்பெயரால்... "குர்ஆன், ஹதீஸை எல்லா மனிதர்களாலும் விளங்க முடியாது. இமாம்கள் கூறுவதை அப்படியே பின்பற்ற வேண்டும். " இந்த வாசகத்தைக் கூறியே, இந்த ஏகத்துவ மார்க்கத்தில் ஏராளமான ஷிர்க், பித்அத்களைப் புகுத்தினார்கள், நம்மால் 'உலமாக்கள்' என்று நம்பப்பட்டவர்கள்.அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவ வாதிகளின் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான பிரச்சாரங்களின் மூலம் அவையெல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டு, ஒரு செயலை மார்க்கம் என்று யார் கூறினாலும் ஆதாரம் கேட்பது; குர்ஆன், ஹதீஸில் இருந்தால் மட்டுமே அது மார்க்கம்; எவருடைய சுய கருத்துக்களும் மார்க்கம் ஆகாது; யாரையும் கண்மூடித்தனமாக தக்லீத் செய்யக் கூடாது என்கிற விழிப்புணர்வை மக்கள் ஓரளவுக்கு அடைந்து வருகின்றார்கள்.. ஆனால், அன்று மக்களை மடமையில் தள்ளிய அன்றைய உலமாக்களின் "குர்ஆன், ஹதீஸை எல்லா மனிதர்களாலும் விளங்க முடியாது" என்கிற அதே வாதம், இன்று ஏகத்துவக் கொள்கையின் பெயரிலேயே மக்களிடம் மீண்டும் முன்வைக்கப் படுகின்றது என்பதை கவனிக்கத் தவறி விடுகின்றோம்..  ஸலஃபுகளின் பிரச்சாரம் :- குர்ஆன், ஹதீஸை எல்லோராலும் விளங்க முடிய...