Posts

இஸ்லாத்தில் பட்டப்பெயர்கள்

தமது கொள்கைக்கு மாற்றுக் கருத்தில் உள்ளவர்களை பட்டப்பெயர் வைத்து இழிவுபடுத்துவது முஸ்லிம்கள் சிலரிடம் உள்ள தீய பழக்கமாகும். . இஸ்லாம் ஒருபோதும் தீய பட்டப்பெயர்கள் வைப்பதை ஆதரிக்கவில்லை. அதற்கு எதிராகவே பேசுகிறது. . يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌۭ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًۭا مِّنْهُمْ وَلَا نِسَآءٌۭ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًۭا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَـٰبِ ۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَـٰنِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ⭘  இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம், மற்றொரு சமுதாயத்தை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள், இவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும், மற்றப் பெண்களை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களைவிடச் சிறந்தோராக இருக்கலாம். உங்களுக்குள் (ஒருவரையொருவர்) குறை கூறிக் கொள்ளாதீர்கள். (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள். இறைநம்பிக்கைக்குப்பின் தீய பெயர்களைச் சூட்டுவது மிகக் கெட்டது. யார் பாவ மன்னிப்புத் தேடவில்லையோ அவர்களே...

மறுமை வெற்றிக்கு மட்டுமா தாஃவா ?

கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம்.  அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லா...

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

           ந பி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்கிற பெண்மனியின் வீட்டிற்கு சென்றுவருவது வழக்கம், அப்பெண்மனி நபிகளாருக்கு பேன் பார்த்துவிடுவார்கள், அருகில் படுத்து உறங்குவார்கள் என்றெல்லாம் ஹதீஸ் என்கிற பெயரில் தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ புனையப்பட்ட செய்தி புஹாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் இடம்பெற்றுள்ளது. பார்க்க : புஹாரி - 2788, 2789, 2800, 2895, 2924, 7001,7002, முஸ்லிம் - 3873, அந்நிய பெண்கள் விடயத்தில் மிகுந்த எச்சரிக்கை பேணக் கற்றுத்தந்த நபிகளாரே, அந்நியப் பெண்ணின் வீட்டில் சென்று உறங்கினார்கள் எனக் கூறுவது அபத்தமான வாதம், மேலும் அந்நிய பெண்களை பார்த்தாலே பார்வைகளை தாழ்த்தும்படி திருமறை குர்ஆன் கட்டளையிடுகிறது, எனவே இந்த உம்மு ஹராம் குறித்த செய்திகள் குர்ஆனுக்கும் ஸஹீஹான பிற ஹதீஸ்களுக்கும், நபிகளாரின் இயல்பான நல்லொழுக்க மாண்புகளுக்கும் தெளிவாக முரண்படுகிறது, இது ஹதீஸாக இருக்கவே முடியாது என்கிற அடிப்படையில் இதை ஏற்கக் கூடாது என்கிறோம்... ஆனால் சிலர் இது போன்ற செய்திகளை உண்மைப்படுத்தி நபிகளாரின் இயல்பான நல்லொழுக்கத்தை இழிவுபடுத்த முயல்கிறார்கள். இதற்கு...

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!

          ந பித்துவ வரலாற்றில் பெரும் அற்புதமாகவும், அத்தாட்சிகளையும் உள்ளடக்கிய அந்த நிகழ்வு நபியவர்களின் மக்கா வாழ்வின் போது நடைபெற்றது. மிஃராஜ் தொடர்பாக ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடம் பரப்புரை செய்யப்படுகிறது. அவற்றை கலைந்து மிஃராஜின்போது நிகழ்ந்தவைகளை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இங்கே அறியத் தருகிறோம்.. இந்நிகழ்வு ரஜப் 27ல் நடைபெற்றதாக ஒரு தவறான நம்பிக்கை மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது.இதற்கு உறுதியான எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மேலும் மிஃராஜ்  நோன்பு என்ற பெயரில் நோன்பு நோற்பதும் நபிகளார் காட்டித் தராத பித்அத்தான (புதுமை) அனாச்சாரம் ஆகும். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். அல்குர்ஆன் 17:1 ஜிப்ரீல் வருகை - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கினார்க...

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

கபுர் ஜியாரத் என்ற நபிவழி மார்க்கத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த நபிவழியை தர்காவில் செய்யும் அமல் என்று பலர் கருதி வருகின்றனர்.இது முற்றிலும் தவறு..கபுர் ஸியாரத்துக்கும் தர்காவுக்கும் சம்பந்தமேயில்லை..ஏன் இஸ்லாத்திற்கும் தர்காவுக்குமே சம்பந்தமே இல்லை என சொல்லலாம்.. (அலீ (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது படைத்தளபதியாக இருந்த அபுல்ஹய்யாஜ் அல் அஸதி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம்.. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) "உயர்ந்துள்ள எந்தக் கப்றையும்" தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதி (ரஹ்)                  நூல்: முஸ்லிம் 1764 கபுர்கள் காரையால் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர்...