மனித ஷைத்தான்கள் - 2

கடந்த பதிவில் ஷைத்தானின் வஅஸ்வாஸின் ஒரு வகையை பார்த்தோம். அதை வாசிக்காதவர்கள் வாசிக்கவும்.

அதன் லிங்க் ..

==========================


மனதை குழப்பும் ஷைத்தானின் வஸ்வாஸிலேயே மிக கவனம் எடுக்க வேண்டியது, உலக இன்பம் பக்கம் தூண்டும் ஷைத்தான்கள் பற்றிய அல்லாஹ்வின் எச்சரிக்கை..

உலக ஆசை , நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை விட்டும் அதாவது மறுமை சிந்தணையை விட்டும் நம்மை திசைதிருப்பும். தற்காலிக உலக இன்பங்களின் மீது ஈர்ப்பை ஏற்ப்படுத்தி, அல்லாஹ்வை மறக்கச் செய்யும்.

அல்லாஹ்வை மறந்து வாழ்பவன் ஷைத்தானின் பாதையில் செல்ல ஆரம்பித்து விடுவான்.அவனது தவறுகள் அவனுக்கு நியாயமாகப் படும். அமல்கள் பாரமாகும். 

தொழுகை இன்னபிற அமல்கள் செய்வதை விட்டும் தூரமாகி, அவனது மனது அதற்கும் ஏதோ ஒரு ஆறுதலைக் கூறி ஏமாற்றி அதன் வழியிலேயே செலுத்தும்..

அதனால் தான் பல இடங்களில் அல்லாஹ் ஏமாற்றக்கூடிய உலக வாழ்க்கை என்று கூறுகிறான்.

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ⭘ 

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. எனவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். ஏமாற்றக் கூடியவனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.

அல் குர்ஆன் -   35 : 5

📌 ஏமாற்றுபவன் யார் என்பதை அல்லாஹ் அடுத்த வசனத்திலேயே கூறுகிறான்.

إِنَّ ٱلشَّيْطَـٰنَ لَكُمْ عَدُوٌّۭ فَٱتَّخِذُوهُ عَدُوًّا ۚ 

ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கிறான். அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்! 

إِنَّمَا يَدْعُوا۟ حِزْبَهُۥ لِيَكُونُوا۟ مِنْ أَصْحَـٰبِ ٱلسَّعِيرِ⭘

தனது கூட்டத்தார் கொழுந்து விட்டெரியும் நரகத்திற்குரியோராக ஆகவேண்டும் என்பதற்காகவே அவர்களை அவன் அழைக்கிறான்.

அல் குர்ஆன் -   35 : 6
=================================

📌 இத்தகைய ஷைத்தான்கள் மனிதர்களிலும் என்று இறைவன் எச்சரிக்கின்றான்..

وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّۭا شَيَـٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍۢ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًۭا ۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ⭘ 

இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களிலுள்ள ஷைத்தான்களை எதிரிகளாக ஆக்கியுள்ளோம். அவர்கள், ஒருவருக்கொருவர் ஏமாற்றுவதற்காக அலங்காரச் சொற்களைக் கூறுகின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களையும், அவர்கள் கற்பனை செய்பவற்றையும் விட்டு விடுவீராக!

அல் குர்ஆன் -   6 : 112

📌 மனித ஷைத்தான்களின் பணி..

உலக வாழ்வைப் பற்றியே பேசுபவன்.

وَمِنَ ٱلنَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُۥ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيُشْهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِى قَلْبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلْخِصَامِ⭘ 

இவ்வுலக வாழ்க்கையைக் குறித்து உம்மைக் கவரும் விதமாகப் பேசுபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவன் தனது உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வை சாட்சியாக்குகிறான். அவனோ கடுமையாகத் தர்க்கம் செய்பவன்.

அல் குர்ஆன் -   2 : 204

மனிதர்களில் சிலரை காணலாம்., எப்பொழுதுமே பணம் சம்பாதிப்பதை பற்றியே சிந்திப்பார்கள், பேசிக்கொண்டு இருப்பார்கள்.

எதிலெல்லாம் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். நாளடைவில் ஹலால் ஹராம் பற்றிய சிந்தணையும்  அவர்களிடம் மிகக் குறைவாகவே காணப்படும்.

வகைவகையான உணவு, கேளிக்கை, சுற்றுலா, பொழுதுபோக்குகள், ஐரோப்பிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சொகுசான  வாழ்க்கை , என்று உலக வாழ்க்கையின் இன்பங்களை சுற்றியே இவர்களின் சிந்தணையும் செயலும் இருக்கும்.
.
இந்த உலக அலங்காரங்கள் அனைத்தும் அனுபவிக்க அல்ல, லயித்து விடாமல் இருக்க இறைவன் அளித்த சோதனைகளே என்பதை மறந்து அனுபவித்து வாழ ஆசைப்படுவார்கள்.

அவர்களுக்கு மார்க்கம் ஈமான் என்று பேசப்படும் சபைகளில் இயல்பாகவே ஆர்வம் வராது. அவர்களோடு யாராவது பேசினாலும் அவர்களையும் உலக வாழ்க்கை பக்கம் திருப்பி விடுவார்கள்.

இவர்களிடம் தர்மம் குறைவாகவும், ஆடம்பரம் மிகையாகவும் இருக்கும். மார்க்கப்பணிக்காக நேரம் ஒதுக்குவது, அதற்காக ஏதேனும் இழப்பை சந்திப்பதை இவர்கள் முட்டாள்த்தனமாக நினைப்பார்கள்.

துஆ கேட்டால் கூட உலகத்திற்காகவே துஆ கேட்பார்கள்.

இவர்களது பேச்சுக்கள்  நமக்கு 
கவர்ச்சியாக தோன்றினாலும், அவை மார்க்கத்தை விட்டு தூரமாக்கும்..

இவர்கள் தீய எண்ணங்களை , கவர்ச்சியான வெளி வார்த்தைகளைக் கொண்டு நம் உள்ளத்தில் வஸ்வாஸை ஏற்ப்படுத்தும் மனித ஷைத்தான்கள் ஆவர்.

இவர்கள் ஈமானில் சரியான நிலைக்கு வரும் வரைக்கும் இவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.

இவர்களிடம் இருந்து தப்பிக்க நல்ல இறைசிந்தனை உடைய மக்களோடு நமது நட்புறவுகைளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

وَٱصْبِرْ نَفْسَكَ مَعَ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُۥ عَن ذِكْرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمْرُهُۥ فُرُطًۭا⭘ 

தமது இறைவனின் பொருத்தத்தை நாடி காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்திப்பவர்களுடன் உம்மை நிலைநிறுத்திக் கொள்வீராக! 

இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நாடி அவர்களை விட்டும் உம் கண்கள் திரும்பிவிட வேண்டாம். நம்மை நினைப்பதை விட்டும் யாருடைய உள்ளத்தைக் கவனமற்றதாக்கி விட்டோமோ அவனுக்குக் கட்டுப்படாதீர்! 

அவன் தனது சுய விருப்பத்தைப் பின்பற்றினான். அவனது காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.

அல் குர்ஆன் -   18 : 28

சுயவிருப்பங்களை பின்பற்றுவர்களை விட்டும் நாம் தூரமாவதே இது போன்ற வஸ்வாஸ்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதாகும்.

📌அதுபோல ஷைத்தானை விட்டும் அனைத்து வகையிலும் தூரமாக முயற்சி செய்ய வேண்டும்.

أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَـٰبَنِىٓ ءَادَمَ أَن لَّا تَعْبُدُوا۟ ٱلشَّيْطَـٰنَ ۖ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ⭘ وَأَنِ ٱعْبُدُونِى ۚ هَـٰذَا صِرَٰطٌۭ مُّسْتَقِيمٌۭ⭘ 

நான் உங்களிடம் உடன்படிக்கை எடுக்கவில்லையா?

ஆதமுடைய மக்களே! “நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. என்னையே வணங்குங்கள்! இதுவே நேர்வழியாகும்” என்று 

அல் குர்ஆன் -   36 : 60,61

📌 ஷைத்தானை வணங்கக் கூடாது…

வணங்குவது என்றால் தொழுவது, சிரம்பணிவது மட்டும் அல்ல, கட்டுப்படுவதும் தான் வணக்கம் ஆகும். ஷைத்தானுக்கு அவனது போதனைகளுக்கு நாம் கட்டுப்பட்டுவிடக் கூடாது.

📌 மார்க்க கல்விக்கு முக்கியத்துவம்.

உபதேசங்களை அலட்சியப்படுத்தக் கூடாது..

இவர்களின் இந்நிலைக்கு காரணம் அவர்களுக்கு எடுத்து சொல்லப்படும் மார்க்க உபதேசங்களை அலட்சியப்படுத்தி வாழ்வதே. மார்க்க உபதேசங்களை அலட்சியப்படுத்தி உலக ஆசையில் மூழ்கி வாழ்வோருடன் அல்லாஹ் ஷைத்தானை சாட்டிவிடுவதாக கூறுகிறான்.

وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱلَّذِىٓ ءَاتَيْنَـٰهُ ءَايَـٰتِنَا فَٱنسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ ٱلشَّيْطَـٰنُ فَكَانَ مِنَ ٱلْغَاوِينَ⭘ 

நமது சான்றுகளை யாருக்கு வழங்கினோமோ அவனைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவன் அதிலிருந்து விலகி விட்டான். அவனை ஷைத்தான் பின்தொடர்ந்தான். எனவே அவன் வழிகேடர்களில் ஒருவனாகி விட்டான்.

அல் குர்ஆன் -   7 : 175

وَلَوْ شِئْنَا لَرَفَعْنَـٰهُ بِهَا وَلَـٰكِنَّهُۥٓ أَخْلَدَ إِلَى ٱلْأَرْضِ وَٱتَّبَعَ هَوَىٰهُ ۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا ۚ فَٱقْصُصِ ٱلْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ⭘ 

நாம் நாடியிருந்தால் அவற்றின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலகத்தின் பக்கம் சாய்ந்து, தனது சுய விருப்பத்தைப் பின்பற்றினான். அவனுக்கு எடுத்துக்காட்டு, ஒரு நாயைப் போன்றது. நீர் அதனை விரட்டினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. இதுவே நமது வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கு எடுத்துக்காட்டாகும். அவர்கள் சிந்திப்பதற்காக இந்த வரலாறுகளை எடுத்துரைப்பீராக!

அல் குர்ஆன் -   7 : 176

======================

وَمَن يَعْشُ عَن ذِكْرِ ٱلرَّحْمَـٰنِ نُقَيِّضْ لَهُۥ شَيْطَـٰنًۭا فَهُوَ لَهُۥ قَرِينٌۭ⭘ 

அளவிலா அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிப்பவருக்காக ஒரு ஷைத்தானை ஏற்படுத்துவோம். அவன் அவருக்கு நண்பனாகி விடுவான்.

அல் குர்ஆன் -   43 : 36

وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ ٱلسَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ⭘ 

(ஷைத்தான்களான) அவர்கள் நேர்வழியை விட்டும் இவர்களைத் தடுக்கின்றனர். இவர்களோ தாம் நேர்வழியில் நடப்பதாக நினைக்கின்றனர்.

அல் குர்ஆன் -   43 : 37

حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَـٰلَيْتَ بَيْنِى وَبَيْنَكَ بُعْدَ ٱلْمَشْرِقَيْنِ فَبِئْسَ ٱلْقَرِينُ⭘ 

இறுதியாக, அவன் நம்மிடம் வரும்போது “எனக்கும், உனக்குமிடையே கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே ! இந்த நண்பன் மிகவும் கெட்டவன்” என்று (ஷைத்தானை நோக்கிக்) கூறுவான்.

அல் குர்ஆன் -   43 : 38

மார்க்க அறிவால் தான் ஈமான் வளரும். ஈமான் உள்ளவர்கள் ஷைத்தானின் தூண்டுதல்களை இனம்கண்டு கொள்வார்கள்.

அவ்வாறு நேர்வழிக்கு மாற்றமான சிந்தணைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நமக்கு ஊட்டப்பட்டால் என்ன செய்ய வேண்டுமென கீழ்க்காணும் இவ்வசனம் கூறுகிறது.

إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ إِذَا مَسَّهُمْ طَـٰٓئِفٌۭ مِّنَ ٱلشَّيْطَـٰنِ تَذَكَّرُوا۟ فَإِذَا هُم مُّبْصِرُونَ⭘ 

இறையச்சமுடையோருக்கு ஷைத்தானிடமிருந்து தீய எண்ணம் ஏற்பட்டால் (அல்லாஹ்வை) நினைவுகூர்வார்கள். உடனே அவர்கள் விழிப்படைவார்கள்.

அல் குர்ஆன் -   7 : 201

மேலும் நேர்வழியில் நிலைத்திருக்கவும் ஷைத்தானின் வஸ்வாஸில் இருந்து பாதுகாப்பும் பெறவும் அதிகமாக இறைவனிடம் கையேந்துவோமாக...

நமது தஸ்கியா வாட்சப் சானலைப் பின்தொடர..



Comments

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

ஆய்வும் தக்லீதும்

நபி வழியில் கபுர் ஜியாரத் ..