Posts

Showing posts with the label இஸ்லாம்

இஸ்லாம் விரோத மெட்டீரியலிஸ சிந்தணை ஓர் பார்வை

Image
இறைவனால் சோதனைக்காக வழங்கப்பட்ட அருட்கொடைகள் பலவிதம். சிலருக்கு பதவி அதிகாரங்களையும், சிலருக்கு செல்வ செழிப்பையும், சிலருக்கு மக்கள் செல்வாக்கையும், சிலருக்கு அறிவாற்றலையும் இறைவன் பூமியில் சோதனையாக வழங்கியுள்ளான். இந்த அருட்கொடைகள் யாவும் அவர்களின் சிறப்பு தகுதிகளோ, சிறப்பு அந்தஸ்தோ அல்ல, குறிப்பிட்ட கால சோதனைக்காக வழங்கப்பட்டவை. இவற்றை எந்தெந்த வழியில் பயன்படுத்தினார்கள் என்பது பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என இஸ்லாம் கூறுகிறது. ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ  பின்னர், அந்நாளில் நீங்கள் இந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அல் குர்ஆன் -   102 : 8   மேலும் பூமியில் மனிதர்களுக்கு இறைவன் இந்த அருட்கொடைகளை வழங்கியிருப்பதே, அவர்களை சுற்றியுள்ள பலவீனர்களின் பொருட்டால் தான் என்று இஸ்லாம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) காரணத்தால்தான் உங்களுக்கு (இறைவனின்) உதவியும் ரிஸ்கும் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள். -  புகாரி 2896 . எனவே அந்த அருட்கொடைகளை வைத்து யாரும் பெருமையடிப்பதும் , மனிதர்களி...

இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்

Image
குடும்பத்துடன் சொர்க்கம் செல்வோரும், நரகம் செல்வோரும்.. وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ⭘ فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا  யாருடைய ஏடு அவனது முதுகுக்குப் பின்புறமாக வழங்கப்படுகிறதோ, அவன் அழிவை வேண்டுவான். وَيَصْلَىٰ سَعِيرًا  அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான். إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا  அவன், தனது குடும்பத்தாருடன் (உலகில்) மகிழ்ச்சியாக இருந்தான். إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ   (இறைவனிடம்) அவன் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டான். بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا  அவ்வாறல்ல! அவனுடைய இறைவன், அவனைப் பார்ப்பவனாக இருந்தான். அல்குர்ஆன் -   84 : 10 - 15 📌 சிலரின் ஏடுகள் முதுகுக்கு பின்னாலிருந்து கொடுக்கப்பட்டு நரகில் எறியப்படுவதற்கு காரணம், அவர்கள் பூமியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது குற்றமா என்றால் இல்லை. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே குடும்பத்தை பயன்படுத்துவது குற்றம். அந்த மகிழ்ச...

ஆய்வும் தக்லீதும்

Image
 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ மொழிபெயர்ப்புகளே மார்க்கம் ஆதாரம் என நம்பிவிடுவது தான் பல குழப்பங்களுக்கு காரணமாக அமைகிறது.மொழிபெயர்ப்பு என்பது அந்த மொழிபெயர்ப்பாளரின் புரிதலின் வெளிப்பாடு மட்டுமே. ஒருவர் எந்த சிந்தனையில் உள்ளாரோ அந்த சிந்தனைக்கு ஏற்றவாரே ஒரு வசனம் அல்லது ஹதீஸின் மொழிபெயர்ப்பை செய்வார். எவ்வளவு கற்றுதேர்ந்த அறிஞரானாலும், அவருக்கும் இவ்வுலகில் “ஒரு பறவை கொத்தியெடுக்கும் நீரின் அளவிலிருந்து குறிப்பிட்ட பங்கு” அறிவு தான் வழங்கப்பட்டுள்ளது எனும்போது, ஒரு எழுத்துக்குள் ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வார்த்தைகளை யாராலும் பரிபூரணமாக மொழிபெயர்க்கவே முடியாது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தங்களால் இயன்றளவு அந்தந்த காலத்திற்கு ஏற்றார்போல் சிறந்த சொல்லாடலை தருகிறார்கள் அந்த கருத்துக்கள் அவர்  கல்வி கற்ற சூழல், கற்பித்த ஆசிரியர்களின் அகீதா, அவர்கள் அல்குர்ஆன் ஹதீஸை அணுகும் கோணங்களை பொருத்து  மாறுபடும். இதை நீங்கள் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஒன்றாக வைத்து ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். மேலும், அல்குர்ஆன் மூல மொழியில் காலத்திற்கும் மாற்ற முட...

மறுமை வெற்றிக்கு மட்டுமா தாஃவா ?

கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம்.  அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லா...