Posts

இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்

Image
குடும்பத்துடன் சொர்க்கம் செல்வோரும், நரகம் செல்வோரும்.. وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ⭘ فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا  யாருடைய ஏடு அவனது முதுகுக்குப் பின்புறமாக வழங்கப்படுகிறதோ, அவன் அழிவை வேண்டுவான். وَيَصْلَىٰ سَعِيرًا  அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான். إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا  அவன், தனது குடும்பத்தாருடன் (உலகில்) மகிழ்ச்சியாக இருந்தான். إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ   (இறைவனிடம்) அவன் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டான். بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا  அவ்வாறல்ல! அவனுடைய இறைவன், அவனைப் பார்ப்பவனாக இருந்தான். அல்குர்ஆன் -   84 : 10 - 15 📌 சிலரின் ஏடுகள் முதுகுக்கு பின்னாலிருந்து கொடுக்கப்பட்டு நரகில் எறியப்படுவதற்கு காரணம், அவர்கள் பூமியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது குற்றமா என்றால் இல்லை. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே குடும்பத்தை பயன்படுத்துவது குற்றம். அந்த மகிழ்ச...

விவேகமான விவாதமும், அநாகரிக சண்டைகளும். - தஃவாவின் வழிமுறைகள்

Image
விவேகமான விவாதமும், அநாகரிக சண்டைகளும். - (தஃவா வழிமுறைகள் ) ============================== ٱدْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ ۖ وَجَـٰدِلْهُم بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ ۖ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ⭘  உமது இறைவனின் பாதையை நோக்கி விவேகத்துடனும், அழகான அறிவுரையைக் கொண்டும் அழைப்பீராக! அவர்களுடன் சிறந்த முறையில் விவாதிப்பீராக! தனது பாதையை விட்டும் வழி தவறியவர் யார் என்பதை உமது இறைவனே நன்கறிந்தவன். நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிந்தவன். அல் குர்ஆன் -   16 : 125 தஃவாவில் அழகிய விவாதம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.  அத்தகைய விவாதத்திற்கு தேவையான இரண்டு விசயங்களை இவ்வசனம் கூறுகிறது. 1.விவேகம் மிக்க பேச்சாற்றல் 2.அழகிய அறிவுரை கூடிய கல்வி இவை இருந்தால் தான் அது அல்லாஹ் அனுமதித்த அழகிய முறையில் விவாதித்தல் ஆகும். =================================== ஆனால் இங்கே சிலர் அநாகரீக வார்த்தைகளுடன் சண்டை போடுவதை கொள்கைக்கான விவாதம் என கருதுகின்றனர்.  வார்த்தைகளுக்கு ஓ...

உண்மையும் போலியும்

Image
உண்மையும் போலியும் மனிதர்கள் இரண்டு வழிகளில் சமுதாயத்தில் தங்களுக்கான நன்மதிப்பை பெறுகிறார்கள்.. 1. ஒருவரின் செல்வம், அதிகாரம் அதன் மூலம் அவர் கட்டமைத்துள்ள செல்வாக்கு, ஆதிக்கமான போக்கு இவற்றின் மூலம் கிடைக்கும் போலியான மறியாதை.. 2. எவ்வித செல்வமோ, செல்வாக்கோ இன்றி சாதாரண மனிதராக வாழ்ந்தும், ஒருவர் பிற மக்களிடம் வெளிப்படுத்தும் நற்குணம், நன்னடத்தை, எளிமை, நேர்மை ஆகியவற்றால் கிடைக்கும் உண்மையான மறியாதை.. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், முதல் வகை மனிதர்கள் சிலரை சமுதாயத்தில் காண்போம். அவர்களிடம் நாம் காணும் ஆணவம், தற்பெருமை, மோசடி, ஏமாற்று போன்ற தீய குணங்களுக்கு, அவர்களிடம் செல்வமும் செல்வாக்கும் மட்டும் இல்லையென்றால் மக்களிடம் எந்த நன்மதிப்பையும் பெற்றிருக்க மாட்டார்கள் எனும் அளவுக்கு தீய குணங்களையும், குறுகிய மனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். . ஆனாலும் அவர்களுக்கு சமுதாயத்தில் மறியாதை செய்யப்பட காரணம் அவர்கள் மீதுகொண்ட நல் அபிப்ராயத்தால் அல்ல. மாறாக, துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதுபோல, இவர்களிடம் ஏன் வம்பு, இவர்களின் நாவிலும், தீங்கிலும் நாமும் சிக்க வே...

தஃவாவின் படித்தரங்கள்

Image
ஒவ்வொரு பணிக்கும் அந்த துறை சார்ந்த அறிவு என்பது அவசியம். . அரபு படிக்காதவர்கள் பயான் செய்யலாம்.. மொழிபெயர்ப்பு ஆதாரங்களை வைத்து கட்டுரைகள் ஆக்கங்கள் தயார் செய்யலாம்..  . ஆனால் ஃபிக்ஹ் மஸாயில்கள், ஹதீஸ் கலை உள்ளிட்டவைகளில் ஆய்வுகள் செய்து மார்க்க தீர்ப்புகள் வழங்குவதற்கும் அரபு மொழி புலமையும், ஹதீஸ் கலை சார்ந்த அறிவும் அவசியம் என்பதை மறுக்க முடியாது.. . அந்த பயான்களும், கட்டுரைகளுமே ஆலிம்களின் மேற்பார்வைக்குட்பட்டு இருப்பது கூடுதல் நலனாகும்.. . காரணம் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் அரபியில் உள்ளன.. மேலும் அரபு படித்தவர்கள் ஏதோ பயானுக்கு குறிப்பு எடுக்கும் அளவில் படிப்பவர்கள் அல்ல.. வாழ்நாளில் குறிப்பிட்ட வருடங்கள் அதற்காகவே ஒதுக்கி உழைப்பை கொடுத்தவர்கள். . சில வேலைகளில் அவர்களின் ஆய்வுகளிலேயே பிழைகள் வருகிறது எனும்போது, அரைகுறை மொழியறிவுடன் செய்யப்படும் ஆய்வுகள் இன்னும் கவனம் எடுக்கப்பட வேண்டியவை.. . அறிவுக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லை என்பது எந்தளவு உண்மையோ, அதேபோல வேறு மொழியிலிருந்து மார்க்க ஆய்வுகள் செய்வதற்கு அரபு மொழிப் புலமை அவசியம் என்பதும் மறுக்கவியலாத உண்மை.. . அ...

இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் மற்றும் முஷ்ரிக்..

Image
அளவிலா அருளாலனும் நிகரிலா அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள் மேலோங்கிய காலம் முதலே தங்களுக்கு மாற்றுக் கருத்தில் உள்ள சக முஸ்லிம் சகோதரனை நோக்கி முஷ்ரிக் காஃபிர் என முத்திரைக் குத்துவது சர்வ சாதாரண ஒன்றாக மாறியுள்ளது. இது பற்றிய தெளிவின்மையால் ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறிழைக்கும் நிலை ஏற்ப்படுகிறது. உதாரணமாக ஒருவரை முஷ்ரிக் என முடிவெடுத்து விட்டால் அவருடன் திருமண உறவு வைப்பது, அவரின் ஜனாஸாவில் பங்கெடுப்பது, அவருக்காக தவ்பா செய்வது என அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஹராமாகி விடுகிறது. இதையெல்லாம் சிந்திக்காமல் முஸ்லிம்களை நோக்கி அவசரகதியில் கொடுக்கப்படும் முர்தத் ஃபத்வாக்களால் அவசியமற்ற இடங்களிலெல்லாம் முஸ்லிம்களிடையே பிளவை உண்டாக்கி பாவம் சம்பாதிக்க வேண்டிய நிலை உண்டாகும். எனவே இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் யார் முஷ்ரிக் யார் என்பது பற்றிய தெளிவு முஸ்லிம்களுக்கு இருப்பது அவசியமாகும். ஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை மட்டுமே அவருடைய வெளிப்படையை வைத்து நாம் தீர்மாணிக்க முடியும். காரணம் இஸ்லாம் என்பது செயல் சம்பந்தப்பட்டது....