வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள். தொடர் - 3



ஸஹாபாக்கள் ஹதீஸ்களை அனுகிய முறையும், இன்று ஸலஃபுகள் என சொல்லிக் கொள்வோரின் நாடகமும்..

இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து “சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்து விட்டு, “அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக! இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக “அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள்” என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு 57:22 என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்)

நூல்: அஹ்மத் (24894
)


பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் சகுனம் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபு ஹுரைரா (ரலி) அறிவித்து வருகிறார் என்று கூறி, அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் விளக்கம் கேட்கிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று மறுத்துபின்வரும் திருமறை வசனத்தை ஓதிக் காண்பிக்கிறார்கள்..

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

திருக்குர்ஆன் 57:22



நமக்கு எந்த துன்பம் நிகழ்ந்தாலும் அதற்கு அல்லாஹ்வின் நாட்டமே காரணம், சகுனம் அல்ல என்கிற கருத்தில் பொருத்தமான குர்ஆன் வசனத்தை ஓதி இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்கிற கருத்தில் அன்னை ஆயிஷா அவர்கள் அந்த ஹதீஸின் கருத்தை ஏற்க மறுக்கிறார்கள்..
ஆனால் அந்த இரண்டு மனிதர்கள் கூறிய ஹதீஸ் அபுஹுரைரா வழியாக மட்டுமின்றி இப்னு உமர் (ரலி), சஹ்ல் பின் ஸஅத் (ரலி) ஆகியோரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் ஸஹீஹான தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


பார்க்க : புகாரி - 5772, 5753, 5095, 5094, 5093
                    முஸ்லிம் - 4478, 4481, 4482


ஆக ஒரு ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் ஸஹீஹான தரத்தை பெற்றிருந்தாலும் குர்ஆனுக்கும், குர்ஆனோடு ஒத்த கருத்தில் வரும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் முரண்படாமல் இருந்தால் மட்டுமே அதை ஏற்க வேண்டும்.. குர்ஆனுக்கு முரண்பட்டால் அதை நபிகளார் கூறியிருக்க மாட்டார்கள் என்கிற கருத்தில் அதை ஏற்கக் கூடாது என்பது ஸஹாபாக்களும் கடைபிடித்த வழிமுறைதான்.. இமாம்கள் பலரும் ஹதீஸ்கலையில் அதையே விதியாக விளக்கியுள்ளார்கள்..


இதையே தவ்ஹீத் ஜமாஅத்தும் பிரச்சாரம் செய்து வருகிறது.. குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பதால் தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி முஃதஸிலா என கதறும் ஸலஃபுகள் இதை செய்த அன்னை ஆயிஷா (ரலி) யை நோக்கி இவ்வாறு கூற முடியுமா ? இந்த விதியை ஹதீஸ்கலையில் எழுதி வைத்த இமாம்களை நோக்கி இவ்வாறு கூற முடியுமா !


குர்ஆனை விளக்கிக் கூற வந்த நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு முரணாக பேசியிருக்க மாட்டார்கள் என்கிற அடிப்படையை விளங்கினாலே இதில் இவ்வளவு விளக்கங்களுக்கே வேலையில்லை..

இவையெல்லாம் அறிந்தும் இன்றைய ஸலஃபுகள் என சொல்லிக்கொள்வோர் சூனியம், கண் திருஷ்டி, போன்ற குர்ஆனுக்கு நேரடியாக முரண்படும் ஹதீஸ்களை உயர்த்தி பிடித்து, தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் இந்த மார்க்கத்தில் மூடநம்பிக்கையை விதைக்க உயிரைக் கொடுத்து உழைக்கின்றனர்...
மேலும் நாங்கள் தான் ஸஹாபாக்களை பின்பற்றும் ஸலஃபு ஸாலிஹீன் கூட்டத்தை சார்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் இவர்கள், அன்னை ஆயிஷா அவர்களின் இந்த வழிமுறைக்கு இன்றுவரை பதிலில்லாமல் வாயடைத்து நிற்கின்றனர்.. 

இஸ்லாத்தின் மூல ஆதாரம் திருமறை குர்ஆனும், அதற்கு விளக்கமாக வரும் நபிகளாரின் விளக்கங்களுமே என்பதை அறிந்தும், எங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் மட்டும் படித்தால் மார்க்கத்தை விளங்க போதுமானதாக இல்லை, முன்னோர்களின் விளக்கங்களும் அவசியம் எனக்கூறி மீண்டும் இஜ்மா கியாஸ் என்கிற அறியாமைக்கால பித்அத்தை நோக்கி திரும்பும் ஸலஃபுகளுக்கு இறைவன் நேர்வழி காட்டுவானாக...

Comments

Post a Comment

Popular posts from this blog

உம்மு ஹராம் செய்தியும் ஃபத்ஹுல் பாரி ஆய்வும்..

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!